பித்தாகரஸ்

bookmark

பித்தாகரஸ் கணிதத்தில் திரிகோணமிதி வளர்ச்சி அடைவதர்க்குக் காரணமாக இருந்தவர்.மேலும்,இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும், அறிவியலாளராகவும் போற்றப்படுகிறார். இவர், அவரது பெயரைக்கொண்டு பெயரிடப்பட்ட பித்தாகரஸ் தேற்றத்துக்காக மிகவும் அறியப்பட்டவர். இவர் எண்களின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இவர் மெய்யியல், மதம் பரப்பல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரது வாழ்க்கை, இவரது கருத்துக்கள் என்பன பற்றி மிகவும் குறைவாகவே தெரிய வந்துள்ளது.

தன்னை ஒரு மெய்யியலாளராகக் கூறிக்கொண்ட முதல் மனிதர் இவரே எனப்படுகின்றது. இவருடைய கருத்துக்கள் பிளேட்டோவிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவரது எழுத்துக்கள் எதுவும் இன்று கிடைக்காததால் இவரைப் பற்றி அதிகம் அறிய முடியாதுள்ளது. பித்தாகரஸ் மீது ஏற்றிச் சொல்லப்பட்ட சிறப்புகள் பல உண்மையில் இவரோடு பணியாற்றியோர் அல்லது இவரது மாணவர்களுக்கு உரியவையாக இருக்கலாம் எனவும் கூறப்படுவது உண்டு. சமோஸ் தீவில் பிறந்த இவர் தனது இளமைக்காலத்திலேயே அறிவைத் தேடி எகிப்து போன்ற பல பிரதேசங்களுக்கும் சென்றார்.

சில கூற்றுகளின்படி பித்தாகரஸ் க்ரோடான் இன பெண்ணான தியானோவை திருமணம் செய்துகொண்டார் எனவும் திலக்ஸ் என்ற மகனும் தாமோ, அரிக்னோட், மையா என மூன்று மகள்களும் அவருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. தன் சிறு வயதில் தந்தையோடு பல ஊர்களுக்குப் போவார். இப்பயணங்கள் புது இடங்களைப் பார்க்கவும், புது மனிதர்களோடு பழகவும் அவருக்கு மிகவும் உதவின.

பிதகோரஸின் முதல் ஆசிரியர் பெரெசைடெஸ் . வானியல், தத்துவம் ஆகியவற்றில் தலைசிறந்த அறிஞர். இக்கலைகளில் அழுத்தமான அறிவை அவர் பிதகோரஸுக்கு வழங்கினார். அறிவைத் தேடிய பிதகோரஸின் அடுத்த ஆசிரியர் அனாக்ஸிமாண்டர் என்ற கிரேக்கக் கணித மேதை. வானவியலிலும் இவர் வல்லவர். சூரிய கிரகணம் எப்போது வரும் என்று கண்டுபிடிக்கும் முறை இவரது ஆராய்ச்சியின் பலன்தான். அறிவுலகின் உச்சியைத் தொட வேண்டுமானால், நீ எகிப்துக்குச் செல். மத குருக்கள் நடத்தும் ரகசியப் பள்ளிக்கூடங்களில் கற்க வேண்டும்” என ஆலோசனை கூறினார் அனாக்ஸிமாண்டர். அதன்படி பிதகோரஸ் எகிப்து சென்றார். இந்த மத குருக்கள் நடத்திய பள்ளிகள் குருகுலம் போன்றவை. கட்டுப்பாடுகள் அதிகம். ஒழுக்கத்தோடு இருப்பவர்களே அறிவு தேடத் தகுதியானவர்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.

பிதகோரஸை மாணவனாக ஏற்றுக் கொள்ள அவர்கள் பல நிபந்தனைகள் விதித்தார்கள். அவற்றுள் முக்கிய நிபந்தனை, பிதகோரஸ் 40 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். வயிற்றுப்பசியைவிட அறிவுப் பசி அதிகம் கொண்ட பிதகோரஸ் நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு ஏற்றார். பிதகோரஸின் மன உறுதியையும், அறிவு தாகத்தையும் கண்ட மத குருக்கள் அவரைத் தங்கள் பள்ளியில் மாணவனாக அனுமதித்தார்கள். கணித அறிவுக்குப் புடம் போடவும் இசையில் ஞானம் பெறவும் இந்த உபவாசம் அவருக்கு உதவியது.

முன்னைய காலத்தில் பூமி தட்டையானது என்ற கருத்தே நிலவிவந்தது. புவி கோள வடிவமானது என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் பித்தாகரஸ் ஆவார். பின்னர் அரிஸ்டோட்டில் இவரது கருத்தை சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் மீது விழும் புவியின் நிழலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நிரூபித்தார். பூகோள அறிவு வளர்வதற்கும், அமெரிக்கா போன்ற புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் மனிதனின் முதல் அடி பிதகோரஸ் தேற்றம் என்று கூடச் சொல்லலாம்.

வரலாற்று நூல்களின் அடிப்படையில் பித்தாகரஸ் இசைக் குறிப்புகளை கணிதச் சமன்பாடுகளாக மாற்றும் வழிமுறையைக் கண்டுபிடித்தார் எனக் கூறப்படுகின்றது. பித்தாகரஸ் ஒரு கொல்லன் பட்டறைத் தாண்டிச் சென்ற போது இரும்பை செப்பனிடும்போது எழுந்த ஒலியைக் கேட்டு இந்த மனதிற்கு இசைவான இசைக்குக் காரணமக அறிவியல் ரீதியான காரணம் உள்ளதென்றும், இது கணித ரீதியானது என்றும், இதனைச் சங்கீதத்தில் பயன்படுத்தலாம் என்றும் உணர்ந்துகொண்டார். அவர் கொல்லனிடத்தில் சென்று அங்குள்ள கருவிகள் எவ்வாறாக வேலை செய்கின்றன என்பதைக் கேட்டறிந்துகொண்டார். சுத்தியல்களின் நிறையானது ஒருகுறிப்பிட்ட விகிதத்தில் இருந்தமையே அந்த ஓசைக்குக் காரணம் எனக் கண்டுபிடித்தார்.

ஆனால் தந்திகளே அளவிற்கு ஏற்ப இசையை வெளிப்படுத்தும் என்றும் சுத்தியலின் நிறைக்கு ஏற்ப இசை மாறுபடாது என்றும் பின்னாளில் நிரூபிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பித்தாகரசே தந்திகளின் நீளத்தை வேறுபடுத்துவதன் மூலம் இசையை மாற்றலாம் என்ற கண்டுபிடிப்பை மேற்கொள்ள முன்னோடியாக இருந்தார்.

பிற்காலத்தில் வெளி நாட்டில் உள்ள ஒரே கருத்து உடையவர்களை பித்தாகரசு ஒன்று சேர்த்தார். நண்பர்கள் துணையுடன் தான் கண்டு அறிந்ததை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். அவரது கருத்தை பண் பட்ட பலர் ஏற்றுக் கொண்டாலும்,சிலர் அவர் சொன்ன கருத்துக்களை எதிர்த்தனர்.

" ஆன்மா இரவாதது. மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு உடலில் புகுந்து பூமியை வந்தடைந்து கொண்டே இருக்கிறது" என்ற கருத்தைக் கூறியதால் அவருக்கு எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்தது. இதனால், அந்த இடத்தை விட்டு நாடோடியாக அலைந்து திரிந்தார். அந்நேரத்தில் மாளமுடியாத பசி, தாள முடியாத களைப்பு,சொல்ல முடியாத துயரங்கள். என்றாலும், உண்மையான அறிவியல் அறிஞன் யாருக்காகவும் தனது கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டான். பிதாகரசும் கொள்கை பற்றுடன் கடைசி வரை இருந்தாலும், காலன் அவரை விடவில்லை. ஓரிடத்தில் அனாதையாக கவனிப்பாரற்று இறந்து கிடந்தார்.