
பப்பாளி கை விரல்கள் மிருதுவாக

பப்பாளி பழக் கூழை அன்னாசி பழச் சாறுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். முட்டையின் மஞ்சள் கருவை வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன்சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள்.
இதனை பப்பாளி கூழுடன் கலந்து உங்கள் கை விரல்களை அதில் அரைமணி நேரம் ஊற விடவும்.
இடையே நகக் கண்களை மசாஜ் செய்யலாம். இதனால் உங்கள் நகம், மற்றும் கை விரல்கள் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மிளரும்.