பகர வருக்கம்
பழிப்பன பகரேல்
- பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.
பாம்பொடு பழகேல்
- பாம்புபோலக் கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
பிழைபடச் சொல்லேல்
- குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.
பீடு பெற நில்
- பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
- உன்னையே நம்பியவர்களைக் காப்பாற்றி வாழ்
பூமி திருத்தி உண்
- விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்
பெரியாரைத் துணைக் கொள்
- அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
பேதைமை அகற்று
- அறியாமையைப் போக்கு
பையலோடு இணங்கேல்
- அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
பொருள் தனைப் போற்றி வாழ்
- பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
போர்த்தொழில் புரியேல்
- யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே
