நீர் விளையாட்டுப் படலம் - 1046

bookmark

சந்திரன் தோற்றம்

1046.

ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும். தம்
வேற்று மன்னர்தம்மேல் வரும் வேந்தர்போல்.
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும்
தோற்ற சந்திரன். மீளவும் தோற்றினான்.
 
ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும் -  (தம்  பகை  மன்னரை
வெல்ல)   வலிமையில்லாமையால்  (முன்பு)   தோற்றுப்  போயிருந்தும்;
தம்     வேற்று  மன்னர்  தம்மேல் - தம்முடைய பகையரசர் மேல்;
வரும் வேந்தர் போல் - (மீண்டும் போரிடத் துணிவுபெற்று) வருகின்ற
மன்னரைப்  போல; எங்கணும்  மாதர் முகங்களொடு ஏற்று - எல்லா
இடத்தும். (கோசல நாட்டு)  மங்கையர் முகங்களோடு எதிர்த்து; தோற்ற
சந்திரன்  மீளவும்  தோற்றினான் - (முன் நிற்க இயலாமல்) தோல்வி
எய்தி (மறைந்து போன) திங்கள் (கீழ்வானில்) மீண்டும் தோன்றினான்.

அம்     மகளிர் முகத்திற்கு முன்பே பலமுறை தோன்றிப் பலமுறை
தோற்றுப்    போனவன்   சந்திரன்;    மீண்டும்    தோன்றியுள்ளான்.
இப்போதும்  வெல்லப்  போவதில்லை.  சிலருக்குத்   தோல்வி.  எந்தப்
பாடத்தையும்  தோற்றுவிப்பதில்லையோ?  என்பார்.  “தோற்ற  சந்திரன்
மீளவும்    தோற்றினான்”    என்றார்.     ஆற்றல்    இன்மையினால்
தோல்வியால்  அழிந்து  போன மன்னர்கள்.  மீண்டும்  மீண்டும்  படை
திரட்டி மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருப்பது இயல்பு.       33