நீர் விளையாட்டுப் படலம் - 1045
சூரியன் மறைதல்
கதிரவன் கடல் புகலும் சந்திரன் எழுச்சியும்
1045.
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான்;
தானும். அன்னது காதலித்தான் என்.
மீன வேலையை. வெய்யவன் எய்தினான்.
மானின் நோக்கியர் - மான் கண்களை ஒத்த விழிகள் கொண்ட
மங்கையர்; மைந்தரொடு ஆடிய - ஆடவரோடு நிகழ்த்திய; ஆன
நீர்விளையாடலை - (காணத்)தக்க நீர் விளையாடலை; நோக்கினான்
வெய்யவன் - நோக்கினவனான கதிரவன்; தானும் அன்னது
காதலித்தான் என - தானும் அந்த நீர் விளையாடல் நிகழ்த்த
விரும்பியவனைப் போல; மீன் வேலையை எய்தினான் - மீன்கள்
நிரம்பி?யுள்ள (மேலைக்) கடலையடைந்தான்.
சிறந்த விளையாடல்களைப் பார்த்தவர்கள். தாமும் அவ்வாடலை
ஆட. உடனே மனக்கிளர்ச்சியுறுதல் இயல்பாதலின் அம்மனவியல்
உணர்ந்த கவிஞர் கதிரவன் மறைவை இவ்வாறு அணியுறக் கூறினார் -
தற்குறிப்பேற்ற அணி. அவர்கள் விளையாடியது நீர் விளையாட்டே
ஆதலின் தானும் அந்நீர் விளையாட பெரு நீர் நிலையமாகிய கடலில்
கதிரவன் இறங்கினான். 32
