தீபாவளி ஸ்பெஷல்: அணுகுண்டு

bookmark

"ஏன் அணுகுண்டு மட்டும் இல்லேங்கிறீங்க..?"

"ம்... அதையெல்லாம் விக்கக்கூடாதுன்னு ஒபாமா உத்தரவு போட்டிருக்காரு!"

"இந்த முறை போரில் வெற்றி நமக்குதான்னு எப்படிச் சொல்றீங்க தளபதியாரே..?"

"மகாராணியார் செய்திருக்கிற தீபாவளி ஸ்வீட்களை ஆயுதமாக எடுத்துக்கொண்டு மன்னர் போருக்குப் போயிருக்கிறாரே!"

"கட்சி ஆபீஸ்ல என்ன கலாட்டா..?"

"தலைவர் பிராக்கெட் போட்ட மகளிர் அணித்தலைவி மேல யாரோ ராக்கெட் வெடி விட்டுட்டாங்களாம்..!"

"போர்க்களத்திலிருந்து தப்பி வந்த மன்னரின் முதுகில் ஏகப்பட்ட தீக்காயங்கள் உள்ளனவே?"

"தீபாவளி வேளையாயிற்றே... எதிரி மன்னன் ராக்கெட் பட்டாசு தாக்குதல் நடத்திவிட்டானாம்!"

"என்ன, தலைவரோட தலையில இவ்ளோ பெரிய கட்டு..?"

"தீபாவளி அன்னைக்கு பொதுக்கூட்டம் வேணாம்னு எவ்வளவோ சொன்னேன்... பேசப்போன இடத்துல எவனோ அவர் மேல தீபாவளி மைசூர்பாகை வீசிட்டான்!"