ஜோசப் ஸ்டாலின்

bookmark


ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (Iosif Vissarionovich Stalin, ஜோர்ஜிய மொழி: იოსებ ბესარიონის ძე ჯუღაშვილი, இரசிய மொழி: Иосиф Виссарионович Сталин, 18 டிசம்பர், 1878[1] - மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைபடுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாக கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.

பதவியேற்றல்

1924ல் இலெனின் இறந்ததால் அந்த பதவிக்கான போட்டியில் ஸ்டாலினும் இடிராட்சுகியும் இறங்கினர். ஸ்டாலினும் காமனேவும் சினோவ்யேவும் தொழிற்துறை மேம்பாடடைய வேளாண்மையும் அதை சார்ந்த விவாசாயிகள் மற்றும் இதர சமூகத்தைனரின் வளர்ச்சியும் முக்கியம் எனக் கூறி வந்தனர். அதை ஸ்டாலின் எதிர்த்துடன் ஒரே நாட்டில் சமவுடைமை என்னும் தத்துவத்தை முன்மொழிந்தார்.[2] ஆனால் அதை எதிர்த்த இடிராட்சுகி தொழிற்துறை வளர்ச்சி முதன்மை பெற வேண்டும் என்றும் அதில் உலகப்புரட்சி தேவை எனவும் கூறினார். ஆனால் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியே சிறந்திருந்தது. இதனால் அவரின் சகாக்களான காமனேவும் சினோவ்யேவும் ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால் அனைத்தையும் தாண்டி ஸ்டாலினே ஆட்சியை பிடித்தார்.

மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் (1928 - 1942)

1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. இந்த பத்தாண்டு கொண்டாட்டத்தில் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களை ஜோசப் ஸ்டாலின் செயல்படுத்தினார். முதலாம் ஐந்தாண்டு திட்டம் 1928ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் கூட்டுப்பண்ணை விவசாயம், தொழிற்துறை வளர்ச்சி, தொடர்வண்டிகளின் முன்னேற்றம் போன்றவை முக்கியத்துவம் பெற்றன. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் முதல் ஐந்தாண்டு திட்டத்தை விட தொழில் வளர்ச்சி இரன்டு மடங்கு அதிகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனால் இரண்டரை மடங்கு மூலதனம் ஒதுக்கப்பட்டது.

இந்த இரண்டு திட்டங்களின் விளைவாக பொறியியல் துறையில் இயந்திரங்கள் 44 சதவீதமாக வளர்ந்தது. கலனினக்கன், இடிரான்சுகாகசசு பர்க்கானா ஆகிய இடங்களில் நெசவாலைகளும் செலியபிசுக், கிசல், ரோவ்கா போன்ற இடங்களில் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டன. தானியங்கள் ஏற்றுமதிக்காக துர்கிசுத்தான் சைபீரிய இருப்புப் பாதை 1500 கிமீ தூரம் போடப்பட்டதால் ஏற்றுமதி அதிகமானது. குசுனட்சுக்கு, மாக்னிதோ, கோர்சுக் ஆகிய இடங்களில் இரும்பு, எஃகு ஆலைகள் திடங்கப்பட்டதால் நாட்டின் இயந்திர இறக்குமதி சிறிது சிறிதாக குறைந்து பின்னர் நிறுத்தவும் பட்டது. 6000 தொழில் நீறுவனங்கள் தோற்றம் பெற்றன. 2.5 இலட்சம் கூட்டுப்பண்னைகள் உருவாக்கப்பட்டது. 1913ல் இருந்ததை விட 5 மடங்கு நாட்டின் வருவாய் அதிகரித்து.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தால் இரசியா எண்ணெய் உற்பத்தியில் முதலாம் நாடாகவும், எஃகு உற்பத்தியில் மூன்றாம் நாடாகவும், நிலக்கரி உற்பத்தியில் நான்காம் நாடாகவும் வளர்ந்தது. தொழில் ஏடுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் தொழிலாளிகளின் தினசரி அலுவல்களும் பணிகளும் பதிவு செய்யப்பட்டன.

இறப்பு

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவரின் அதிக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்பட்டது. மார்ச் 5,1953 ஆம் ஆண்டு இவருக்கு இதயத்திசு இறப்பு ஏற்பட்டதால் இறந்தார்.