செவ்வாய் கிரகம்
1. "உன் மாமியாரோட செல்போனை எடுத்து, எதுக்காக வைப்ரேஷன் செட் பண்றே..?"
"அவங்களால ஒரு சின்ன அதிர்வைக்கூட தாங்கிக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்..... அதை டெஸ்ட்
பண்ணலாமேன்னுதான்!"
2. "கபாலி பொக்கிஷமா சில விஷயங்களை சேகரிக்கிறான்னு சொல்றீங்களே... அப்படி என்ன சேகரிக்கிறான் ஏட்டய்யா?"
"லேடி கான்ஸ்டபிள்கள் யூஸ் பண்ண ஹேர்பின், வளையல் எல்லாம் தான்!"
3. "மாப்பிள்ளைக்கு சின்ன வீடு நிறைய இருக்குன்னு தெரிஞ்சும் ஏன் பொண்ணு கொடுத்தீங்க..?"
"அந்த வீடுகள்ல நிறைய வாடகை வரும்னு ஆசைப்பட்டு கொடுத்திட்டேன்"
4. "செவ்வாய் கிரகத்தில் நான் சின்ன வீடு வெச்சிருப்பது எப்படித் தான் என் மனைவிக்குத் தெரிந்ததோ தெரியவில்லை."
"முட்டாள், உன் வீட்டு வேலைக்காரியின் சொந்த ஊரே அந்த செவ்வாய் கிரகம்தானே!"
5. "நம்ம தலைவருக்கு பொது அறிவு கம்மின்னு எதை வச்சு சொல்றே...?"
"ராஜ்ய சபாவுல எம்.பி.க்கள் ஏன் பாடறதில்லைன்னு கேட்கறாரே...!"
