சகர வருக்கம்
சக்கர நெறி நில்
- தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )
சான்றோர் இனத்து, இரு
- அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
சித்திரம் பேசேல்
- பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே
சீர்மை மறவேல்
- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
சுளிக்கச் சொல்லேல்
- கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதீர்
சூது விரும்பேல்
- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
செய்வன திருந்தச் செய்
- செய்யும் செயல்களைத் தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
சேரிடம் அறிந்து சேர்
- நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
சை, எனத் திரியேல்
- பெரியோர் 'சீ' என வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே
சொல், சோர்வு படேல்
- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
சோம்பித் திரியேல்
- முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
