கோர்பசேவ்
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் சோவியத் ரஷ்யாவும்,அமெரிக்காவும் பல்வேறு தளங்களில் பனிப்போரை நடத்தி வந்தன. அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர் தான் கோர்பசேவ். கோர்பசேவின் அப்பா அறுவடை இயந்திரம் இயக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்; கோர்பசேவ் சட்டம் படித்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். இவரது இரு தாத்தாக்களும் 1930 களில் அதாவது ஸ்டாலின் காலத்திலேயே பொய் குற்றச் சாட்டு சாட்டப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். மொத்தத்தில் கோர்பசேவ் எளிய பின்னணியில் இருந்து தான் வந்தார். ரஷ்யாவில் அடுத்தடுத்து மூன்று மூத்த தலைவர்கள் மறையவே, இவரது 54 வயதில், ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இவரைத் தேடி வந்தது.
பல வெளிநாடுகளுக்கு கட்சிப் பயணமாக போனார்.இவரது முக்கியக் குறிக்கோள் தேக்கமடைந்து கிடக்கும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தான்.பீர் மற்றும் வோட்காவின் மீதான விலையை பல மடங்கு ஏற்றினார். மேலும் அவைகள் மிகக் குறைந்த விலையிலேயே அரசு உற்பத்தி செய்தது. இதனால் மது கிடைக்காமல் மக்கள் பலர் எரிச்சல் அடைந்தார்கள், சிலர் வாடி வதங்கிப் போனார்கள். இதனைக் காரணமாகக் கொண்டு கள்ள மார்கெட்டில் மது அதிக விலைக்கு விற்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசுக்கும் பல பில்லியன் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. 28 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய வெளி உறவுத்துறை அமைச்சரை கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பினார் கோபர்சேவ்.
அமெரிக்காவிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு, அணு ஆயுதத்தை அதிக அளவில் குறைத்தார். அப்கானை விட்டு சோவியத் படைகளை வெளியேற்றினார். கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யா செலுத்தி வந்த ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்வதாக பிரகடனம் செய்தார். இதனால், அப்பகுதியில் கம்யுனிஸ்டுகள் செல்வாக்கு இழந்தனர். எழுபது வருடங்களுக்கு மேலாக ரஷ்யாவில் மக்களுக்கு மறுக்கப்பட்ட பேச்சுரிமையையும், எழுத்துரிமையையும் மீண்டும் வழங்கினார். இதனால் அரசாங்க அமைப்புகள் அதிகம் விமர்சிக்கப் பட்டது. தனியாரை முக்கியத் துறைகளில் தேவை இல்லாமல் களம் இறக்கினார். இதனால், தனியார்களின் பணம் சம்பாதிக்கும் மோகத்தால், மக்கள் பெருமளவில் சுரண்டப்பட்டனர். மக்கள் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் அலையும் படி பரி தவித்துப் போனார்கள். இதன் காரணமாக ரேஷன் முறையில் இறக்குமதி செய்து உணவு வழங்கினார். இந்த இறக்குமதியின் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் மேலும் கவலைக்கு இடமானது. என்றாலும் அமைப்பு ரீதியாக ஜனநாயகத்தை கொண்டு வந்தார். கருத்துரிமை மக்களுக்கு அளிக்கப்பட உடன், அது வரையில் அடங்கி இருந்த மக்களுக்கு தேசிய உணர்வு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது .மக்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். அதனால் நிலைமை மிகவும் மோசமானது.
கோர்பசேவ் மூன்று நாட்களுக்கு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். இதனைப் பயன்படுத்தி ரஷ்யாவின் பிடியில் இருந்த சில நாடுகள் தன்னிச்சையாக விடுபடுவதாக அறிவித்தன. கோர்பசேவ் மக்களால் அதிகம் விமர்சிக்கப் பட்டார். ரஷ்யாவின் பொருளாதாரத்தை இந்த அளவுக்கு மோசமாக யாரும் அதுவரை கொண்டு வந்தது இல்லை என்ற நிலையில் கோபர்சேவ் பதவியை விட்டு விலகினார். எனினும் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மோசமான நேரத்தில், மோசமான முடிவுகளை கையாண்டதால் தோல்வின் மனிதர் எனப் பட்டார். இவரது வாழ்க்கை பல அரசியல் தலைவர்களுக்கு இன்றும் கூட ஒரு படிப்பினையாக இருக்கிறது.
