கொடநாடு
1. "ரொம்ப நேரமா உலக வரைபடத்துல என்ன தேடுறீங்க?"
"எல்லா நாடும் இருக்கு. கொடநாடு காணோமேய்யா!"
2. "தலைவருக்கு எங்கே, என்ன பேசறதுன்னு தெரியலை!"
"என்ன விஷயம்?"
"உங்களுக்கு ஜாமீன் குடுத்தா வெளில போய் சாட்சிகளைக் கலைக்கக் கூடாதுன்னு கோர்ட்ல நீதிபதி சொன்னப்ப... "அப்புறம்
எனக்கு எதுக்கு ஜாமீன்"னு கேட்டுட்டார்!"
3. "இந்தப் படத்தில் நீங்க கழுதை மேய்க்கிறீங்க..."
"அடடா... இமேஜ் கெட்டுப் போயிடுமே!"
"அட! கழுதையோட இமேஜ் கெட்டுப்போனா நமக்கென்ன சார்!"
4. "நகை காணாமப் போச்சுன்னு புகார் கொடுத்திருக்கீங்களே... எங்க காணாமப் போச்சு?"
"டி.வி. சீரியல்ல சார்!"
5. "இவ்வளவு செருப்புகள் மேல விழுந்தும், தலைவர் இன்னும் பேச்சை நிறுத்தலையே...."
"நல்ல ஜோடி செருப்பு விழும்வரை காத்துக்கிட்டிருக்கார்...!"
