கூட்டணி தர்மம்
"நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா?"
"ஒண்ணும் இல்லை சார்!"
"அட ஆச்சரியமா இருக்கே!"
"சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!"
டேய் மச்சி, நாளைக்கு சினிமாவுக்கு போறேன் வர்றியாடா...?
முடிஞ்சா வர்றேன் மச்சி...
படம் முடிஞ்சி ஏன்டா வர! படம் ஆரம்பிக்கு பொழுதே வா!
"என்ன மேடம் எங்களுக்கு ஒதுக்கின தொகுதிகள்ல உங்க கட்சி வேட்பாளரை நிற்க வைக்கிறீங்க, இதுதான் கூட்டணி தர்மமா?"
" 'வார்த்தைய கொட்டாதீங்க' எங்க ஆளுங்க நின்னா என்ன? தொகுதி இப்பவும் உங்களதுதான"
ஒருவன்: சிகரெட் புடிச்சா கேன்சர் வரும்.
மற்றொருவன்: இல்லையே நான் பத்து வருஷமா புடிக்கிறேன். எனக்குத் தெரியாதா? சிகரெட் புடிச்சா புகைதான் வரும்.
"அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன்!"
"அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்."
