கிட்னி
1. "அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்சே...?"
"மாவுக்கட்டு போட கிரைண்டர் வாங்கணும்னு சொன்னாரே...!"
2. "சார், செத்தவனின் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலைமறைவாகி விட்டான். இப்ப என்ன சார் பண்றது?"
"கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!"
3. "செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டினால் அபராதம்னு உமக்குத் தெரியாதா?"
"தெரியும்.... நான் பேசலே... என் மனைவி பேசுவதைக் கேட்டுக்கிட்டிருக்கேன்...1"
4. "உங்க கிட்னி டோட்டலா டேமேஜ் ஆகிடுச்சு..."
"சரி... ஆஃப் ரேட்டுக்காவது எடுத்துக்கங்க டாக்டர்..!"
