காரல் மார்க்ஸ் - 3
“ ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்."
காரல் மார்க்ஸ் , மேலும் தனது எழுத்துக்களில் மூலம் விவரிக்கிறார். அதாவது " ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், அதற்க்கு ஒரு விலை கொடுத்தே அதை வாங்குவீர்கள். அந்தப் பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு , நீங்கள் கொடுக்கும் பணம் போய்ச் சேர்கிறதா என்றால் இல்லை. மூலதனத்தைப் போட்ட முதலாளி ஒட்டு மொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார். அப்படியில்லாமல் மூலத்தை உளைக்கிரவனுக்கும், பிரித்துத் தர வேண்டும்". இந்த எழுத்துக்களால் எரிச்சல் அடைந்த உலக முதலாளிகள் ஏராளம்.
உலகின் பொருளாதாரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் . அவர் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியது. அவர் மனைவி ஜென்னி மிகவும் பணக்கார இடத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆனால் காரல் மார்க்ஸ் அவர்களை திருமணம் செய்த பின்னர், அவர் படாத கஷ்டம் இல்லை. அவளுக்குப் பிறந்த குழந்தைகள் மாண்டு போனார்கள். அக்குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யக் கூட காசு இல்லாமல் இருந்தது ஜென்னி தனது டைரி குறிப்பில் தனது குழந்தை இறந்த வருத்தத்தை இவ்வாறு எழுதிகிறாள் "பிறந்த பொழுது உனக்குத் தொட்டில் கட்ட காசில்லை. இப்பொழுது இறந்து அடக்கம் செய்ய காசில்லை. நீ ஏன் என் வயிற்றில் பிறந்தாய் " என்று. ஜென்னி பசியால் நொடிந்து போய் இருக்க மார்பில் இருந்து ரத்தம் சொட்ட பிள்ளைகளுக்குப் பாலூட்டிய கொடுமையிலும் கூட, மார்க்ஸை அன்புடன் சுருட்டு வாங்கிக் கொடுத்து கவனித்தார் .
1881 ஆம் ஆண்டு டிசம்பரில் மார்க்சின் மனைவி ஜெனி காலமானார். இதன்பின் மார்க்சு 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது.இவர் 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதி மார்க்சு இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்சை இலண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் முதலியோர் அடங்குவர். ஏங்கெல்சு பேசும்போது,
"மார்ச்சு 14 ஆம் தேதி மூன்று மணிக்குக் கால் மணிநேரம் இருந்த போது வாழ்ந்து கொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்" என்றார்.
இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) என்பதும், The philosophers have only interpreted the world in various ways—the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சின் கல்லறையை அமைத்தனர். இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முந்தைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது. ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.
