கலிலியோ
கலிலியோ (15 பிப்ரவரி 1564 - 8 ஜனவரி 1642), ஒரு இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் அறிஞர், மற்றும் தத்துவ ஞானி. இவர் அறிவியல் புரட்சியில் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளார். மதம் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசி யில் விஞ் ஞானத்தின் முன் மண்டியிட்டுத் தான் தீர வேண்டும். அப்படி மண்டியிடச் செய்தவர்களுள் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலிலியோ என்னும் விஞ்ஞானி மிக மிக முக்கியமானவர். வானவியலின் தந்தை என்று வருணிக்கப்படுபவர் இவர். இசைக் கலைஞரின் மகனாகப் பிறந்தவர். பைசா நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
கணிதத்துறைப் பேரா சிரியராக பைசா பல்கலைக் கழகத்திலும், படூவா பல் கலைக் கழகத்திலும் பணி புரிந்தார்.அவருடைய ஆய்வுக் களம் என்பது விண்தான்.கலிலியோ சூரியனின் கரும்புள்ளிகளை கவனித்த முதல் ஐரோப்பியர்களில் ஒருவர் ஆவார். கெப்லர் அறியாமல் 1607 இல் இதை கண்டார். ஆனால் அப்போது அவர் அதை மெர்குரி என எண்ணினார். அவர் முன்னர் மெர்குரி என்று சார்லிமேக்னி காலத்தில் தவறாக கருதப்பட்ட ஒரு அவதானிப்பை அது உண்மையில் சூரியனின் கரும்புள்ளி என கூறினார். சூரியனின் கரும்புள்ளிகளின் இடமாற்றம் சூரியன் சுழல்கிறது என்ற கெப்லரின் கூற்றை ஆதரித்தது. மேலும் பிரான்செஸ்கோ சிச்சியின் கரும்புள்ளி மீதான கவனிப்புகள் ப்டோலேமியின் வானியல் கூற்றுகளை தகர்த்தது.
தனது தொலைநோக்கி மூலம் தாமஸ் ஹாரியட் ( ஒரு ஆங்கிலேய கணிதவியலாளர் மற்றும் ஆய்வாளர் ) ஏற்கனவே நிலாவில் வெளிச்சம், அது ஒரு கச்சிதமான உருண்டையாக இருந்திருந்தால் எப்படி பரவ வேண்டுமோ அப்படி பரவவில்லை என்பதை கண்டார். ஆனால் தனது அறியாமையால் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் போய்விட்டார். கலிலியோவோ அவ்வெளிச்சத்தின் பரவலில் இருக்கும் மாறுதல்களை கொண்டு சரியாக நிலாவில் மலைகளும் குழிகளும் உள்ளன என்று புரிந்துகொண்டார். தனது ஆய்வில் அவர் நிலாவின் டாப்பலாஜிக்கல் வரைபடங்களை வரைந்தார். மேலும் நிலாவின் மலைகளின் உயரத்தை கணிக்கவும் செய்தார். நிலவு நீண்ட காலாமாக அரிஸ்டாட்டில் கூறியபடி ஒரு அருமையான உருண்டை அல்ல என்பது அப்போது தெரியவந்தது.
வியாழன் கிரகத்தின் துணைக் கோள்களை முதலில் கண்டவர் இவர்தான். ஏற்கெனவே இருந்து வந்த தொலைநோக்கியைத் தம் ஆய்வுத் திறனால் மேலும் செழுமைப்படுத்தினார். வியாழனைச் சுற்றியுள்ள துணைக் கோள்கள் வியாழனைச் சுற்றி வருவதைக் கண்டறிந்தார்.
கலிலியோ சனி கிரகத்தை கவனித்தார், மேலும் முதலில், அதன் வளையங்களை தவறாக கிரகங்கள் என எண்ணினார். கலிலியோ 1612 இல் நெப்டியூன் கிரகத்தை பார்த்தார். அது மங்கலான நட்சத்திரங்களில் ஒன்றாக அவரது கையேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு அது ஒரு கிரகம் என்று தெரியவில்லை, ஆனால் அவர் அதை கண்காணிப்பதை இழப்பதற்கு முன் நட்சத்திரங்களுக்கு ஒப்பிடும் போது அது நகர்கிறது என்ற கவனிப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மத உலகைப் பொருத்த வரை இது ஓர் அதிர்ச்சியான தகவலாகும். பூமியைத்தான் எல்லாக் கிரகங்களும் சுற்றிக் கொண்டிருந்தன என்பது தான் மதத்தின் நம்பிக்கை. பைபிள் கோட்பாடும்கூட! சூரியக் குடும்பமும் பூமியைத் தான் சுற்றுவதாக அன்றைக்கு இருந்த அவர்களின் அறிவு அவர்களை நம்ப வைத்தது. அதற்கு முதல் அடி கொடுத்தவர் கோபர்நிக்கஸ். சூரியனை மையப்படுத்தி அவரின் கண்டுபிடிப்பை வழிமொழிந்தார் புரூனோ.
மதவாதிகளால் பொறுத் துக் கொள்ள முடியவில்லை. கல்லால் அடித்தே கோபர் நிகசைக் கொன்றனர். புரூ னோவோ உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.அதே கருத்துகளைத் தான் கலிலியோவும் கூறினார். மதம் மருண்டது என்றாலும், உயிருக்கு ஆபத்தில்லை; மாறாக வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
1593இல் கலிலியோ ஒரு வெப்பமானி உருவாக்கினார். ஒரு விளக்கில் உள்ள காற்றின் விரிவடைதல் மற்றும் சுருங்குதலை பயன்படுத்தி அதனுடன் இணைக்கப்பட்ட குழாயில் நீரில் இயக்கத்தை உருவாக்கி இச்செயலை அவர் சாத்தியமாக்கினார்.1595 மற்றும் 1598 க்கு இடையில், கலிலியோ ஒரு வடிவவியல் மற்றும் இராணுவ திசைகாட்டியை உருவாக்கினார். இராணுவ வீரர்களுக்கு இது பீரங்கிகளை சரியாக உயர்த்துவது மட்டுமல்லாமல் எவ்வளவு வெடி மருந்து தேவை என்பதை நிர்ணயிக்கவும் பயன்பட்டது.
விண்ணைப் பார்த்துப் பார்த்து ஆய்ந்து ஆய்ந்து அந்த இரு விழிகளோ படிப்படியாக பார்வையை இழந்து கடைசிக் காலத்தில் முற்றிலும் பார்வையற்றவரா னார்! 1642 ஜனவரி 8 இல் மரணமுற்றார். மதவாதிகள் அவர் இறந்த பிறகும் கூட,அவர் கல்லறை இருக்கும் இடத்தை மறைத்தனர்.அவரது நூல்களில் பெரும்பாலும் அழிக்கப்பட்டன எஞ்சியவை மட்டும் நமக்குக் கிடைத்து உள்ளது.
