கட்சி ஆபீஸ்

bookmark

1. "தலைவர் "கிளினிக்"குக்கு போலாமான்னு கேக்கறாரே.... உடம்புக்கு முடியலையா?" 

"ம்ஹும்... அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்ததுலயிருந்து, கட்சி ஆபீஸ் போறதை இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு!"

2. "கட்சியிலேர்ந்து உங்களை நீக்கியும், நீங்க கவலைப்படலையே... எப்படி தலைவரே?"

"தன்னோட மனசிலேர்ந்து மகளிர் அணித்தலைவி என்னை நீக்கலையே!"

3. "குடியை மறக்க மருந்து கொடுத்தேனே... எப்படி வேலை செய்யுது?"

"ஊறுகாயை மறக்க முடியலை டாக்டர்..!"

4. "கபாலி ரொம்ப உணர்ச்சிவசப்படறானா... அப்படி என்ன செய்தான்?"

"திருடப் போற இடத்துல எல்லாம், "என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு நன்றி"ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!"

5. "மாடசாமி கிட்ட நெருங்கிப் பழகி இருக்கக்கூடாது..."

"ஏன் ஏட்டய்யா அப்படிச் சொல்றீங்க?"

"அவனோட மாட்டை ஸ்டேஷனுக்குக் கூட்டிவந்து லாடம் கட்டச் சொல்றான்!"