எம்.எம்.தண்டபாணி தேசிகர்

எம்.எம்.தண்டபாணி தேசிகர்

bookmark

வாழ்க்கைச் சுருக்கம்:

மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். தெருவெங்கும் திருப்பாக்களைப் பாடி, தேவாரப் பாடலாசிரியராக அமர்ந்திருந்த தண்டபாணி தேசிகரைப் பட்டினத்தார் திரைப்படம் அவரைச் சென்னைக்கு இழுத்து வந்தது. பட்டினத்தார், நந்தனார் உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1952 தியாகராசர் ஆராதனை சம்பவம்:

1952 தியாகராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமை போலத் அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு,சமஸ்கிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தைக் கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடினார்கள்.
அவர் நடித்த திரைப்படங்கள் சில:

 

  • பட்டினத்தார் (1936)

  • வள்ளாள மகாராஜா (1937)

  • தாயுமானவர் (1938)

  • மாணிக்கவாசகர் (1939)

  • நந்தனார் (1942)

  • திருமழிசை ஆழ்வார் (1948)