இறுதி காலம்

இறுதி காலம்

bookmark

தேர்தலில் நேரு காங்கிரசை மிகப் பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது. உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு பதவியைத் துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1959 இல் தனது மகள் இந்திரா காங்கிரசு தலைவரானதும் அதிக விமரிசனங்கள் எழுந்தன. நேரு மக்களாட்சிக்குப் புறம்பானது "என்று கூறி தன் கட்சியில் இந்திராவின் பதவியை மறுத்தார்.[14] இந்திராவே கொள்கை விஷயத்தில் தன் தந்தையுடன் மிகுந்த கசப்புணர்வுடன் இருந்தார், குறிப்பாக, காங்கிரசு காரிய கமிட்டிகேரளா [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசை நீக்கியது.[14] நேரு தொடர்ந்து மகளின், பாராளுமன்றப் பழமையை மதிக்காதது மற்றும் தூக்கி எறிவது போல் நடப்பது போன்றவற்றால் தர்மசங்கடத்திற்கு உள்ளானார். தன் தந்தையின் பெயரால் இல்லாமல் தன் சொந்த அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்திரா செயல்பட்டது மிகுந்த மனவருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியது [15].

திபெத்தின் மீதான 1954 சீன-இந்திய உடன்படிக்கையில் பஞ்சசீலக் கொள்கைகள் அடிப்படையாக இருந்தாலும்,பின்னர் நேருவின் வெளியுறவுக் கொள்கை எல்லைச்சண்டையினால் மற்றும் தலாய்லாமாவுக்கு அடைக்கலம் தர முடிவு செய்து அனுமதி அளித்தது இவையெல்லாம் சீனாவின் எதிர்ப்பை அதிகப்படுத்தியதால் சிரமப்பட்டது. பல வருடங்கள் தொடர்ந்து சமாதானம் பேசியும் தோல்வியடைந்ததால், நேரு 1961 இல் போர்த்துக்கலிலிருந்து கோவாவை இணைத்துக் கொள்ள இந்திய ராணுவத்திற்கு அனுமதியளித்தார். கோவா விடுதலை மூலம் அவரது புகழ் அதிகரித்தாலும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்குக் கண்டனங்களும் அதிகரித்தன.

நேரு 1962 இல் நடந்த தேர்தலில் குறைந்த ஆதரவுடன் காங்கிரசை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். எதிர்க்கட்சிகளான இடது சாரி பாரதிய ஜன சங்கம், சுதந்திரா கட்சி சமூகவாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவைகள் நன்கு பரிமளித்தன.

ஒரு சில மாதங்களில் சீனா உடனான எல்லைத் தகராறு,வெளிப்படையான சண்டையானது.முன்னாள் ஏகாதிபத்தியத்தினால் பாதிக்கப் பட்டவைகள் ஆதலால் சொல்வழக்காக " இந்தி-சைனி பாய் பாய்"(இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்) என்று கூறப்பட்டதுபோல் இருவரும் ஒரு உறுதித்தன்மையைப் பங்கிட்டுக் கொண்டதாக நேரு ஊகித்தார்.வளரும் நாடுகளுக்கு மத்தியில் சகோதரத்துவம் மற்றும் உறுதித்தன்மை போன்ற நல்ல நெறிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தார். நேரு, ஒரு பொதுவுடைமை நாடு தன்னைப் போன்ற இன்னொரு நாட்டைத் தாக்கும் என்பதை நம்பவில்லை.மற்றும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவர், உடைக்கமுடியாத பனிபடர்ந்த இமாலயச் சுவருக்குப் பின்னால் பாதுகாப்பாக உணர்ந்தார். இந்த இரண்டும்,சீனாவின் உள்நோக்கங்களையும்,மற்றும் ராணுவ சக்தியையும் நேரு மிகத் தவறாகக் கணக்கிட்டதை நிரூபித்தன.பின் வரும் அறிக்கைகள் சீனா சண்டையிட்ட இடங்களை ஆக்கிரமித்து விடக் கூடாது என்ற நேருவின் எண்ணத்தை -சுருக்கமாக, நினைவில் நிற்கக்கூடிய ஒரு வரியில் தெரிவிக்கின்றன அது, ராணுவத்திடம் "அவர்களை வெளியே தூக்கி எறியுங்கள்" என்று கூறியதுதான். சீனா அதிரடியாகத் தன் தாக்குதலைத் தொடங்கியது.[16]

சில நாட்களில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் சீனா ஊடுருவி இந்திய ராணுவத்தின் பலகீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி, சீன சக்திகள் அஸ்ஸாம் வரை சென்று விட்டன. அவருடைய அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள்மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது. இதனால் நிர்ப்பந்தத்தின் பேரில் பாதுகாப்பு அமைச்சரான கிருஷ்ண மேனனை பதவியிலிருந்து நீக்கி, அமெரிக்க ராணுவ உதவியை நாடினார். 1953 நேருவின் ஆரோக்கியம், குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.சில வரலாற்றாளர்கள் இதைச் சீன ஊடுருவலிலிருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாகக் கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார்.[17] 1964 இல் காஷ்மீரிலிருந்து திரும்பியதும் நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, 27 மே அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.டில்லித் தெருக்களில் இருந்தும்,மயானத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.'