இந்தியாவின் முதல் பிரதம மந்திரி
நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945ம் ஆண்டு சூன் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர்.
நேரு இடைக்கால அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்தி செல்லும்போது மத வன்முறை, அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரியது ஆகியவற்றால் உண்டான கலவரங்கள் நேருவின் ஆற்றலை முடக்கின. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் நேரு தயக்கத்துடன் வேறு வழியின்றி 1947 ஜுன் 3 -இல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
"பல வருடங்களுக்கு முன்னாள் நாம் விதியுடன் போராடினோம். இப்போது நாம் செய்த சத்தியத்தை செயலாக்கும் நேரம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் அல்லது முழு அளவில் இல்லாவிட்டாலும் மிக அவசியமாக வந்து விட்டது. நடுநிசி நேரத்தில், உலகம் உறங்கும்போது இந்தியா சுதந்திரத்துடன் உயிர்ப்புடன் விழிக்கும். சரித்திரத்தில் மிக அரிதான சமயம் வரும், அப்போது ஒரு சகாப்தம் முடியும்போது மற்றும் தேசத்தின் ஆத்மா கொடுமைப்பட்டது முடிவதை தேடும்போது பழையனவற்றிலிருந்து நாம் புதியவற்றிற்காக வர வேண்டும். இந்தப் புனிதமான நேரத்தில் இந்தியாவின் சிறந்த மனிதநேயத்திற்காகவும் இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நாம் பிரமாணம் செய்துகொள்வோம்."
இந்தக் காலகட்டம் ஆழமான சமுதாய வன்முறையால் குறிப்பிடப்பட்டது. இந்த வன்முறை பஞ்சாப் மாகாணம், டில்லி, வங்காளம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தது. நேரு பாகிஸ்தானிய தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட அகதிகளின் கோபத்தைத்தணித்து அமைதியை உண்டாக்கி உற்சாகப்படுத்த எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தார். நேரு, மௌலானா ஆசாத் மற்றும் பிற முஸ்லிம் தலைவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து அவர்களை இந்தியாவிலேயே இருக்கும்படி உற்சாகப்படுத்தினார். அந்த நேரத்து வன்முறை அவரை மிகவும் பாதித்ததால் எல்லாவற்றையும்எவற்றை? நிறுத்த ஆணையிட்டார், ஐக்கிய நாடுகள் அவையும் 1947 இந்திய பாகிஸ்தான் போரை நிறுத்தச் சொன்னது. சமுதாயக் கலவரங்களுக்காகப் பயந்த நேரு, ஐதராபாத் மாநிலத்தைச் சேர்க்க ஆதரவு அளிக்கத் தயங்கினார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த ஆண்டுகளில் நேரு அவரின் சொந்த விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளவும் அவரைக் கவனித்துக் கொள்ளவும் அடிக்கடி மகள் இந்திராவையே நாடினார். 1952 இல் நடந்த தேர்தலில் நேருவின் தலைமையின் கீழ் காங்கிரசு பெருமளவில் வெற்றி பெற்றது. நேருவைக் கவனிப்பதற்காக இந்திரா, அவருடைய அதிகாரப் பூர்வமான வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
