ஆல்பிரட் நோபல்

bookmark

ஆல்ஃபிரட் நோபல், நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.

கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும் , கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும் , நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் பிறந்தார். அஜ்ஜோடி 1827 ல் திருமணம் செய்துகொண்டது .மொத்தமாக அவர்கள் எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.குடும்ப வறுமையின் காரணமாக, ஆல்ஃபிரட் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் மட்டுமே குழந்தைப் பருவத்தை உயிருடன் கடந்தனர். தனது தந்தை வழியாக, ஆல்பிரட் நோபல் ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஒளுஸ் ருட்பெகின் சந்ததியில் இருந்து வந்தவராகிறார்.ஆல்பிரட் நோபல் இளம் வயதில் பொறியியலில், குறிப்பாக வெடிபொருட்களில் ஆர்வம் காட்டினார். தொழில்நுட்பத்தின் மீது அவர் கொண்ட ஆர்வமானது ஸ்டாக்ஹோமின் ராயல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னால் மாணவராகிய தனது தந்தையால் அவருக்கு வாய்க்கப்பெற்றதாகும்.

பல்வேறு வர்த்தக தோல்விகளை தொடர்ந்து, நோபலின் தந்தை 1837 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாக வளர்ந்து வந்தார். அவர் நவீன ஒட்டு பலகையை (plywood) கண்டுபிடித்தார். கையில் இதன் மூலம் நிறைய பணம் சேரவே ஆல்ப்ரெட் நோபலின் பெற்றோர்கள், தனியார் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு நோபலை அனுப்பினர். அதனால் அவர் வேதியியல் பாடம் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். சிறுவனாக அவர் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், மற்றும் ரஷிய மொழிகளில் சரளம் அடைந்தார்.

இளமையில், நோபல், வேதியியலாளர் நிகோலாய் ஜினின் உடன் படித்தார். பின்னர், 1850 ஆம் ஆண்டில், மேற்படி வேலைக்கு பாரிஸ் சென்றார். 18 வயதில், கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் கீழ் ஒரு குறுகிய காலம் ஒத்துழைத்து, அவர் வேதியியல் ஆய்வுகளை நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் மேற்கொண்டார். ஜான் எரிக்சன் அமெரிக்க உள்நாட்டு போர்க்கான ஐயன்க்லட் USS மானிட்டரை வடிவமைத்தார். நோபல் 1857 இல், ஒரு எரிவாயு மீட்டரைப் பற்றிய , தனது முதல் காப்புரிமையை தாக்கல் செய்தார்.அவர்கள் ஆரம்பித்த அவர்களது

குடும்பத்தின் தொழிற்சாலை, க்ரிமியன் போர்க்காக ஆயுத உற்பத்தியை செய்து வந்தது. ஆனால், க்ரிமியன் போர் முடிந்ததும், உள்நாட்டு உற்பத்திற்கு மீண்டும் மாறுவதற்கு கடினமாக இருந்த நிலையில் அவர்கள் திவாலாகும் நிலை இருந்தது. 1859 ஆம் ஆண்டில், நோபலின் தந்தை தனது இரண்டாவது மகனான, லுட்விக் நோபலிடம் , தனது தொழிற்சாலையை விட்டுச் சென்றார். அவன் பெரிதும் வணிக முன்னேற்றத்தை பெற்றான். பிறகு நோபல் மற்றும் அவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் இருந்து சுவீடன் திரும்பினார்கள். நோபல் வெடிபொருட்களின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக நைட்ரோக்லிசெரினின் (டுரின் பல்கலைக்கழகத்தில் தியோபில் ஜூல்ஸ் பிலோசின் மாணவரான அச்கானியோவால், சொப்ரீரோவால் 1847 இல் கண்டுபிடிக்கப்பட்டது) பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். நோபல் 1863 ஆம் ஆண்டு ஒரு வெடி கண்டுபிடித்தார்; மேலும் 1865 ஆம் ஆண்டு, அவர் வெடிக்கும் தொப்பியை வடிவமைத்தார்.

3ஆம் செப்டம்பர் 1864 அன்று, ஸ்டாக்ஹோமில் ஹெலேன்போர்க்கில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொட்டகையில் வெடிவிபத்து ஏற்பட்டதால், நோபலின் இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் மரணம் அடைந்தனர். ஆனால், நோபெல், சிறிய விபத்துக்களை சந்தித்தாலும் கலக்கம் இல்லாமல் தலைமறைவாக, அவர் உருவாக்கிய வெடிபொருட்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த மேலும் தொழிற்சாலைகள் கட்ட சென்றார். நோபல் நிலையற்ற நைட்ரோகிளிசிரினைவிட கையாள எளிதாக மற்றும் பாதுகாப்பான பொருளாகிய , டைனமைட்டை1867 இல் கண்டுபிடித்தார். டைனமைட்டிற்கு, அமெரிக்க மற்றும் பிரிட்டனில் காப்புரிமை பெறப்பட்டது. மேலும் இது சுரங்கம் மற்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1875 ஆம் ஆண்டு நோபல் மேலும் நிலையான மற்றும் டைனமைட்டை விட சக்தி வாய்ந்த, கெலிக்னிட்டை கண்டுபிடித்தார்.

நோபல், பிற்காலத்தில் இரண்டு நோபல் பரிசுகளுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் நிறுவனமான அறிவியல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் 1884 ம் ஆண்டில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1893 ஆம் ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

நோபல் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி அவர்களது சொந்த உரிமையில் மிகவும் பணக்காரராக மாறினர். நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை குவித்தார் மேலும் 350 காப்புரிமை களை சர்வதேச அளவில் வெளியிட்டார். நோபல் சமாதானத்தை விரும்புகிறவராக இருந்தாலும், அவரின் மரணத்திற்கு முன்னால் 90 ஆயுத தொழிற்சாலைகள் நிறுவினார்.

1891 ஆம் ஆண்டில், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரர் லுட்விக்கின் மரணத்திற்குப் பிறகு நோபல் பாரிஸில் இருந்து இத்தாலியின் சான் ரெமோக்கு, சென்றார். மார்பு அவதியுற்று, நோபல் 1896 ல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக , வீட்டில் இறந்தார். அவரது குடும்பம், நண்பர்கள் அல்லது சக மாணவர்களுக்கு தெரியாமலேயே, அவர் நோபல் பரிசுகள் வழங்குவதற்கு தனது செல்வத்தை விட்டு சென்றார். அவர் ஸ்டாக்ஹோமில் நோராவில் புதைக்கப்பட்டார்.