ஆரஞ்சு தோல் பொடி

ஆரஞ்சு தோல் பொடி

bookmark

ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழத் தோல்கள் கூட வைட்டமின் சி-யின் வளமான மூலமாகும். பாலிபினால்கள், தாவர கலவை, ஆரஞ்சு தோலில் நிறைந்திருப்பதால், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நாட்பட்ட நோய்களைப் பராமரிக்கவும், எதிர்த்துப் போராடவும் இது உதவுகிறது.

ஆராய்ச்சியின் படி, ஆரஞ்சு பழத்தை விட அதன் தோலில் பாலிபினால் உள்ளடக்கம் அதிகம். ஆரஞ்சு தோல்களில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெய்கள்’ தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் லிமோனைன் நிறைந்ததாக அறியப்படுகிறது. இந்த பழத்தின் தோல்கள் அதிக நார்ச்சத்து கொண்டவை, இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.