அமிதாப் பச்சன் - 2
1973 பச்சனுக்கு முக்கிய வளர்ச்சி வாய்ந்த வருடமாக அமைந்தது, இயக்குநர் பிரகாஷ்மெஹ்ரா தனது 'ஜன்ஜீர்' படத்தில் முதன்மைப்பாத்திரம் வழங்கினார். அதில் இன்ஸ்பெக்டர் விஜய்கன்னாவாக அற்புதமாக நடித்தார்! முந்தைய காதல் தீவிர முனைப்புமிக்க திரைப்படங்ளைவிட மாறுபட்டதாக அது அமைந்தது. மேலும் அவருக்கு 'கோபக்கனல் மிக்க வாலிபன்'என பாலிவுட்சினிமாவில புதிய கீர்த்தி பெற்றுத் தந்தது. அதையே தொடர்ந்து பிறபடங்களிலும் பின்பற்றினார். அது அவருக்குத் தொழில்ரீதியாக, பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற ஏதுவாகி, 73ல் பிலிம்பேர் மிகச்சிறந்த நடிகர் விருதுக்காக பெயர் முன்மொழியப்பட்டது. அதேவருடத்தில் அவர் ஜெய பாதுரியைத் திருமணம் புரிந்துகொண்டார். இருவரும் இணைந்து ஜன்ஜீர் , அபிமான் போல பலபடங்களைத் தந்தனர். பின்னாளில் பச்சன் நமக் ஹராம் படத்தில் விக்ரம் வேடத்தில் நடித்தார். அந்த சமூக சித்திரம் ரிஷிகேஷ் முகர்ஜீ இயக்க, பிரெஷ் சட்டேர்ஜீ நட்பின் பொருளில் ஸ்கிரிப்ட் பணி செய்து முடித்தார். ராஜேஷ் கன்னா, ரேகாவுடன் இதில் அவர் துணைவேடம் ஏற்று நடித்தது பாராட்டுதல்கள் பெறவைத்தது. பிலிம்பேர் சிறந்த துணைநடிகர் விருது அதனால் பெற்றார்.
1974ல் பச்சன் பல கௌரவவேடங்களில் நடித்தார். 'கன்வாரா பாப்' மற்றும் 'தோஸ்து' அதில் குறிப்பிடத் தக்கதாகும். துணைவேடங்கள் தாங்கிய பிறகு பெற்ற அந்நிலை அந்த வருடம் அவரை வெகுஜன அந்தஸ்து பெறவைத்தது, 'ரொட்டி கபடா அவுர் மக்கான்' திரைப்படம் ஆகும். மனோஜ் குமார் எழுதி இயக்கிய அப்படம் நிலைகுலையாத நேர்மை வறுமையில் செம்மை குணாதிசயங்களை வெகுவாகச் சித்திரித்துக் காட்டியதால் விமர்சனம் வியாபாரரீதியில் வெற்றி பெற்றது. சசிகபூர், ஜீனத் அமன், மற்றும் குமாருடன் அமிதாப் போட்டி போட்டு நடிப்பில் வெளுத்துக் கட்டினார். 1976 டிசம்பர் 6 ஆம்நாள் வெளிவந்த 'மஜ்பூர்' முதன்மை வேடம் ஏற்று நடித்தார் ஜார்ஜ்கென்னடி நடித்த ஹாலிவுட் ஜிக்ஜாக் ஆங்கிலப்படத்தின் ஹிந்தி மறுவடிவப்படமாகும். அது பாக்ஸ் ஆபீஸ் இல் சுமாரான வெற்றியைத்தான் தந்தது. 1975ல் மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்தார். 'சுப்கே சுப்கே' நகைச்சுவைப் படம், 'பரரர்' குற்றவியல் படம், 'மிலி' காதல்களிப்புப் படம் முக்கியமானவையாகும். அவைகளைத் தொடர்ந்து வந்த இருபடங்கள் இந்தித் திரைப்பட வரலாற்றில் அவரைப் புகழேணியின் உச்சியில் கொண்டுபோய்ச் சேர்த்தது. 'தீவார்' படம் யாஷ்சோப்ரா இயக்கத்தில் சசிகபூர், நிருபாராய், நீட்டுசிங் உடன் அவர் நடித்தார். 75ல் மிகப்பெரும் வெற்றிப் படமாக அது அமைந்து, மிகச்சிறந்த நடிக்கருக்கான பிலிம்பேர் விருதை அவருக்கு ஈட்டித்தந்தது. தரவரிசையில் எண் 4 பெற்றது. இன்டியாடைம்மூவிஸ் டாப் 25' தீவார் படம் பட்டியலில் கண்டிப்பாக பார்க்கத்தகுந்த பாலிவுட் படம் என்ற அந்தஸ்த்தைக் கொடுத்தது.
இரண்டாவதாக 1975 ஆகஸ்ட் 15 சுதந்திரத்தினம் அன்று வந்த ஷோலே (பொருள்: தீப்பிழம்புகள்) இந்தியாவிலேயே அதிக மொத்த வசூல் அள்ளிக் குவித்த பெருமைபெற்றதாகும். ரூ 2,36,45,00,000 தொகை அமெரிக்க டாலர் மதிப்பில் 60 மில்லியன்களாகும். பணவீக்கம் சரிக்கட்டக் கூடிய அளவிற்கு அமைந்தது. திரைப்படத் துறையில் மிகப்பெரும் நடிகர்களான தர்மேந்திரா, ஹேமாமாலினி, சஞ்சீவ்குமார், ஜெயபாதுரி, அம்ஜத்கான் ஆகியோருடன் பச்சன் ஜெயதேவ் பாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்தார் பணவீக்கம் 1999ல் பிரிட்டிஷ் ஒலிபரப்பு கார்பரேஷன் ஆயிரம் ஆண்டுகளில் மிகச்சிறந்த படமெனப் பாராட்டுதல்கள் தெரிவித்தது. தீவாரைப் போல் இண்டியாடைம்ஸ்மூவீஸ் 'கண்டிப்பாகக் காணவேண்டிய பாலிவுட் படங்கள்' டாப்25' பட்டியலில் இடம் நல்கியது. அதேவருடம் ஐம்பதாதவது பிலிம்பேர் வருடாந்திரவிழாவில் 50 ஆண்டுகளில் இல்லா தனிச்சிறப்புப் பெற்ற படம் என்ற பெருமையை வழங்கியது.
ஷோலே படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பச்சன் தொழில்துறையில் தனது நிலையை பலப்படுத்திக் கொண்டமையும் , 1976 முதல் 1984 வரைக்கும் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் பிலிம்பேர் சிறந்த நடிகர் விருதுகளும், பரிந்துரைகளும் ஏராளமாகப் பெற்றார். ஷோலே போன்ற படம் அவரது தகுதியைப் பாலிவுட்டின் மேம்பட்ட ஆக்க்ஷன் நாயகன் என்ற புகழ்உச்சிக்குக் கொண்டு சென்றது. பிறவகை வேடங்களையும் அவர் இலகுவாகக் கையாளமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார். 1976ல் 'கபிகபி' படத்தில் காதல் வயப்படுபவராகவும், 1977ல் 'அமர்அக்பர்அந்தோணி'யில் நேரத்திற்கேற்ற நகைச்சுவையாளராகவும், அதேபோல் 75ல் 'சுப்கே சுப்கே'வில் சிரிப்பு வேடத்திலும் சோபித்துக் காட்டினார். 1976ல் இயக்குநர் யாஷ்சோப்ராவின் இரண்டாவது படமான 'கபி கபி' காதல்படத்தில் அமிட்மல்ஹோத்ராவாகப் பூஜா என்ற ஓர் அழகான இளம்பெண் மேல் ஆழ்ந்த காதலில் விழுந்தவராக நடிகை ராக்கி குல்ஜாருடன் கவர்ச்சிகரமாக நடித்தார். உணர்வு பூர்வமான உரையாடல்கள் மிருதுவான கதைப்போக்கு அவரை கோப தாபம் மிக்க முந்தைய வீர வேடங்களைக் காட்டிலும் மாறுபடுத்திக் காட்டியது. மறுபடியும் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது! மறுபடியும் பாக்ஸ்ஆபீஸ் பெரும்வெற்றி!
1977ல் 'அமர் அக்பர் அந்தோணி' படத்துக்கான சிறந்த நடிகர் பிலிம்பேர் விருது கிடைத்தது. அதே அமர் அக்பர் அந்தோணி படத்தில் வினோத்கன்னா மற்றும் ரிஷிகபூருடன் அந்தோணிகான்சால்வ்ஸ் பாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்தார். 1978ஆம் ஆண்டு அவரை வெற்றிவிழா நாயகராக மேல்நிலையில் உயர்த்தியது. அந்தவருடம் இந்தியாவிலேயே அதிகபட்சம் நடித்த பெருமை பெற்றார். தொடர்ந்து படங்களில் இரட்டை வேடங்களிலும் நடித்துத் தன்திறமையை வெளிப்படுத்தினார். 'காஸ்மே வாடே' யில் அமிட்-ஷங்கராக நடித்தார் 'டான்' படத்தில் தலைமறைந்து வாழும் நிலவறைத் தாதாவாகவும், அவரைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட விஜய் பாத்திரமாகவும் நடித்தார். அந்த நடிப்பாற்றல் பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது பெறவைத்தது. அதேபோல் 'திரிசூல்' 'முக்தார் கா சிக்கந்தர்' படங்கள் இன்னும் பல விருதுகள் பெறவைத்தது. முன்எவரும் செய்யாத சாதனை, பெறாத வெற்றி அவர்பெற்ற காரணத்தால் பிரெஞ்சு இயக்குநர் பிரான்காயிஸ்ட்ரூப் அவரை 'ஒருநபர் தொழிற்சாலை' என வியந்து பாராட்டினார்.
1979ல் மிஸ்டர் நட்வர்லால் படத்தில் அவரது குரல் இசைக்குரலாக ஒலித்தது. ரேகாவுடன் இணைந்து அதில் நடித்தார். அந்தப்படத்தால் அவர் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதுடன் சிறந்த ஆண்பாடகருக்கான விருதும் உடன்பெற்றார். அதே வருடம் வெளிவந்த 'காலா பாத்தர்' படத்துக்கான சிறந்த நடிகர்விருது பெற்றார். மறுவருடம் ராஜ்கோஸ்லா இயக்கிய 'தோஸ்தானா' படத்துக்காகவும் விருதுக்கு முன்மொழியப்பட்டார்! அப்படத்தில் சத்ருகன்சின்ஹா, ஜீனத்அமனுடன் சேர்ந்து நடித்தார். தோஸ்தானா அதிக மொத்த வசூல்பெற்ற பெருமை அந்தவருடம்1980 இல் தந்தது. 1981ல் இசைஇன்ப மயமான யாஷ்சோப்ராவின் படம் 'ஸில்ஸில்' மனைவி ஜெயாவுடனும் கிசுகிசுக்கப்பட்ட காதலி ரேகாவுடனும் நடித்தார். 1980 முதல் 1982 வரை வெளிவந்த பிறபடங்கள், 'ராம்பல்ராம்' , 'ஷான்', 'லாவாரிஸ்' 'ஷக்தி' ஆகிய யாவும் ஈடில்லாத நடிகர் திலீப்குமாருடன் ஈடுகொடுத்து நடித்தார்.
1982ல் கூலிப் படத்தில் நடிக்கும் பொழுது சண்டைக் காட்சியில் புனீட்இஸ்ஸாருடன மோதும் போது, உணவுக்குழாய் பாதிக்கும் வண்ணம் காயமடைந்தார். பச்சன் எப்போதும் சண்டைக் காட்சியில் அபாயகரம் எனினும் சுயமாகவே நடிப்பார் ஒரு காட்சியில் மேஜையில் விழுந்து தரையில் விழவேண்டும். மேஜை மூலையின் கூர்முனை அவரது அடிவயிற்றை ஊடுருவியது. அதிக அளவு குருதியும் கொட்டியது மண்ணீரல் முறிவு உடனடியாக மருத்துவமனையில் அவசரச்சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். மண்ணீரல் பாதிக்கப்பட்டிருந்தது உயிருக்கும் ஊசலாடும் நிலை! பல மாதங்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம்! அவர் நலம் விரும்பும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் மருத்துவ மனையில் நின்றிருந்தனர். இழந்த வலுமீண்டும் பெற வேண்டினர் மாதக்கணக்கில் அவர் குணமடைய வேண்டி யிருந்தது. ஓர்ஆண்டு உடல்நலம் சீராகும் காலம் ஆனது. பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப்பின் 1983ல் வெளிவந்த படம் அந்த விபத்தையே விளம்பரமாகப் பயன்படுத்தியதால் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது.
இயக்குநர் மன்மோகன் தேசாய் பச்சனின் விபத்திற்குப்பின் கூலி படத்தின் இறுதி முடிவை மாற்றினார். முதலில் இருந்தது போலவே சாகடிக்கப்பட்டால் அது கொஞ்சம் கூடப் பொருத்த மற்றிருக்கும் என்று இயக்குநர் கருதினார். நிஜவாழ்வில் மரணத்தின் விளிம்பைத் தொட்டுப் பிழைத்தவர் திரைப்படத்தில் மரண மடைந்திருந்தால்அது ஏற்புடையதாக அமைந்திருக்காதென்று எண்ணினார். படவெளியீட்டில் சண்டைக் காட்சிகள் அபாயக் கட்டத்தில் உறைந்து விடுவது போலக் காட்டினார். அந்தக் காட்சியில் முகப்புரை சேர்த்தார் அதன்படி நடிகர் அடிபட்ட நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தமையால் அந்த விபத்து அதிகவிளம்பரம் கொடுத்தது. நிஜவாழ்வில் மரணத்தின் விளிம்பைத் தொட்டுப் பிழைத்தவர் திரைப்படத்தில் மரணமடைந்திருந்தால் அது ஏற்புடையதாக அமைந்திருக்காதென்று எண்ணினார்.
