அண்ட முடியலியே

தனக்குப் பின்னால் தன் மகள் இங்கு வந்தால் வரவேற்பிாரது என்றும், அவமதிக்கப்படுவாள் என்றும் தந்தைக்குத் தெரியும். அதனால் தான் உயிரோடிருக்கும் போதும் தான் வீட்டிலிருக்கும் சமயம் வரச் செரல்லுவார் தன் மகளை. மகள் வருகிறாள் பிறந்த வீட்டில் வரவேற்று அன்புடன் ஆதரித்து “நான் இல்லாத சமயம் வராதே” என்று முன் கூட்டியே அறிவித்தாரே! அவர் நிரந்தரமாகப் பிரிந்து போய்விட்டாரே என்பதை எண்ணி அழுகிறாள். அவர் இருந்த தன் பிறந்த வீட்டை,தருமரோட மண்டபம் என்றும், ஆயிரங்கால் மண்டபம் என்றும்,தந்தையைத் தருமர், அர்ச்சுனர், புண்ணியர் என்று புகழ்ந்து கூறுகிறாள்.
தங்கக் கட்டு தாம்பாளம்
தருமரோட மண்டபம்-நீங்க
தருமரும் போயி சேர-நீ பெத்த
தனியாருக்குத் தாங்க முடியல்லையே
பொன்னு கட்டு தாம்பாளம்
புண்ணியரோட மண்டபம்-என்ன பெத்த
புண்ணியரே நீ போக-எனக்கு
பொறுக்க முடியலியே
என்னை அண்டாத யிண்ணீங்களே
ஆயிரங்கால் மண்டபத்தே-என்ன பெத்த
அர்ஜூனனும் நீ போக
அண்ட முடியலியே
வட்டார வழக்கு:அண்டாத-அண்டாதே, நெருங்காதே;இண்ணீங்களே-என்றீர்களே.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
----------------