ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம்

bookmark

ரம்புட்டான் பழத்தின் தோல் பகுதி சீதபேதியைக் குணப்படுத்தும். ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதை தடுக்கும்.

 இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
 

உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் தடுப்பதால் மாரடைப்பு அபாயம் குறைகிறது. ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக்

கட்டுப்படுத்துகிறது. கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.

 இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்களை பளபளப்புடன் வைக்கிறது.

 இப்பழத்தில் உள்ள இரும்புசத்து உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க செய்கிறது.