மல்பெர்ரி பழம்
வைட்டமின் K, கால்சியம் மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் வலுவான எலும்பு திசுக்கள் மற்றும் எலும்புகளை உருவாக்க உதவுகிறது.
வெள்ளை முசுக்கொட்டைப் பழங்களில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் டைப்-2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளை ஒத்திருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
முசுக்கொட்டை பழத்தில் உள்ள அந்தோசயினின்கள் புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
முசுக்கொட்டைப் பழத்தில் அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
மல்பெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின் C கண்புரை நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
அடிக்கடி காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் மல்பெரி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
