இலந்தைப்பழம்

இலந்தைப்பழம்

bookmark

இலந்தைப்பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்பதால், உடல் சூட்டை தணிக்கும் வல்லமை கொண்டது.

கல்வி பயிலும் மாணவர்கள் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வர ஞாபக சக்தி மேம்படும்.

இலந்தைப்பழம் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும் ஆற்றல் கொண்டது.

இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், எலும்புகள் வலுப்பெற பெரிதும் உதவுகிறது.
 

இலந்தைப்பழத்திற்கு, பித்தம் தொடர்பான பிரச்சனைகள், பசியின்மை, பயணங்களின் போது ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்றவற்றை போக்கும் சக்தி உண்டு.

பெண்கள் மாதவிலக்கு காலங்களில் இப்பழத்தை சாப்பிட நன்மை கிடைக்கும்.

இலந்தைப்பழம் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

மேலும் தூக்கமின்மைக்கும் ஒரு சிறந்த மருந்தாகிறது.