பப்பாளி பழம்

பப்பாளி பழம்

bookmark

பப்பாளி, கண்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு அருமருந்தாக செயல்படுகிறது.
 

நரம்புகள் பலப்படவும், இரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தி மேம்படவும், ஆண்மை தன்மை பலப்படவும் பப்பாளியைச் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இப்பழம் வயிறு உப்புசம், வயிறு கோளாறு, மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகிறது.
 

பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைத்து இரத்த ஓட்டம் சீராக பெரிதும் பயன்படுகிறது.
 

இப்பழம் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.
 

பல் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைத்தல் போன்றவற்றிற்கு மிகவும் நல்லது.
 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முதன்மையானதாகவும் உள்ளது.
 

வைட்டமின் C அதிக அளவில் இருப்பதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.