
விருந்தும் மருந்தும் மூன்று நாள்

விளக்கம் :
சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.