நகர் நீங்கு படலம் - 1716

1716.
‘முன்னர், கோசிகன் என்னும் முனிவரன் -
தன் அருள்தலை தாங்கிய விஞ்சையும்,
பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ?
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே.
‘முன்னர் - தந்தையார் விசுவாமித்திர முனிவனிடம் வேள்விகாக்க
அனுப்பிக்கையடை கொடுத்த போது; கோசிகன் என்னும் முனிவரன் -
விசுவாமித்திரனாகிய கௌகிசமுனிவனது; அருள்தலை - கருணையினால்;
தாங்கிய - (நாங்கள்) பெற்ற; விஞ்சையும் - மந்திர வித்தைகளும்;
பின்னர் எய்திய பேறும் - பிறகு அடைந்ததிருமணப் பேறும்;
பிழைத்தவோ? - தவறியவோ; அவர் ஏறிய செய்தல் - வனம்சென்று
அத்தகைய முனிவர்கள் ஏவிய காரியங்களைச் செய்து முடித்தல்; இன்னம்
நன்று -இன்னமும் நல்லதையே தரும்.
விசுவாமித்திரனால் கிடைத்த விஞ்சை பலை, அதிபலை என்ற இரண்டு
மந்திரங்கள். பின்புஎய்திய பேறு சீதா கல்யாணம், அடுத்துப் பரசுராமனது
ஆற்றலை ஒடுக்கியதையும் சொல்லலாம்.மேலும், முனிவர்களுக்குத் தொண்டு
செய்து வனத்தில் தங்குவதால் நலமே விளையும் என்றான்இராமன். ‘ஏ’
காரம் ஈற்றசை. 22