கடிமணப் படலம் - 1270

bookmark

1270.    

மந்தர மணி மாட
   முன்றிலின்வயின் எங்கும்.
அந்தம் இல் ஒளி முத்தின்.
   அகல் நிரை ஒளி நாறி.
அந்தர நெடு வான் மீன்
   அவண் அலர்குவது என்ன.
பந்தரின் நிழல் வீச.
   படர் வெயில் கடிவாரும்.
 
அந்தர   நெடுவான்மீன்   இவண்   அலர்குவது   என்ன  -
விண்வெளியாகிய  நெடுவானத்து   விண்மீன்களின்  தொகுதி  எல்லாம்
சேர்ந்து  இங்கு   ஒளிவீசுவதுபோல்;  மந்தரமணிமாடம்  முன்றிலின்
வயின்  எங்கும்  -  மந்தரகிரி  போன்ற  அழகிய  மாட  வீடுகளின்
முன்புறத்தின்   இடம்   முழுவதிலும்;  அந்தம்  இல்  ஒளிர்முத்தில்
அகல்நிரை  ஒளிவீச  -  அளவற்றனவாய்.  ஒளிரும் தன்மையனவான
முத்துக்களின் அகன்ற வரிசை ஒளி வீசா  நிற்க (இடப்பட்ட);  பந்தரின்
நிழல்வீச  -  (முத்துப்) பந்தரின்  நிழல் பரவுதலினால்;  படர்வெயில்
கடிவாரும்   -   (எங்கும்)   பரவுகிற   வெயிலைத்   தடுப்பவர்களும்
(ஆயினர்.)  

முத்துக்கள்     குளிருந் தன்மையவாதலின்.  வெயிலுக்குக் குளிர்ச்சி
நல்க  அவற்றால் பந்தல் இட்டனர் என்பதனால். நகரத்தின்  வளமிகுதி
உணர்த்தியவாறு.   திருமணம்   நிகழ்நாள்.   பங்குனி   உத்தர  நாள்
ஆதலின்.  வெயிலின் கடுமை நீங்க. வீடுகள்தோறும்  பந்தர்  இட்டனர்;
அதுவும் முத்துப் பந்தர் என்றவாறு.                            26