பவானி

பாடல் 964
ராகம் - மோஹனம்
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7) /4 யு 0
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதான தானத் தனதான தனதான தானத் ...... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின் மனைமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே.