நியாயம் கிடைக்கவில்லை

குழந்தையிருந்து விதவையானால் அவளுக்குப் புகுந்த வீட்டில் ஓரளவு அதிகாரமும், சுதந்திரமும் உண்டு. சொத்துரிமையும் கிடைக்கும். குழந்தையில்லாத `மலடி` என்னும் பட்டம் பெற்றவள் அவள். அத்துடன் கணவனும் இறந்து போனான். பிறந்த வீட்டுக்குச் செல்லலாமென்றால் அங்கும் இருக்க வழியில்லை. புகுந்த வீட்டுச் சொத்தில் தன் கணவனுக்கு உரிய பாகத்தைச் சாதாரணமாக வாயாலே கேட்கிறாள் கிடைக்கவில்லை.ஊர்ப் பொதுவில் நாட்டாண்மைக்காரர்கள் முன்னிலையில் தான் நியாயம் கேட்டாலும் தனக்கு நியாயம் கிடைப்பதாகத் தெரியவில்லையெனவும், காலம் வீணாகக் கழிகிறதே எனவும் கூறி வேதனைப்பட்டு அழுகிறாள்.
புளியாம் மரத்தின் கீழே
பொன் குறிஞ்சி போட்டிருக்கும்
பொன் குறிஞ்சி மேலிருந்து
பொண்ணு நியாயம் பேசினாலே
பொழுது வெளியாச்சு
பொண்ணு நியாயம் தீரவில்லை
மாமரத்தின் கீழே
மண் குறிஞ்சி போட்டிருக்கும்
மண் குறிஞ்சி மேலிருந்து
மங்கை நியாயம் பேசினாங்க
மாலை பொழுதாச்சி
மங்கை நியாயம் தீரவில்லை
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சக்கிலிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
------------