நகர் நீங்கு படலம் - 1769

1769.
‘புக்குப் பெரு நீர் நுகரும்
பொரு போதகம் என்று, ஒலிமேல்
கைக்கண் கணை சென்றது அலால்,
கண்ணின் தெரியக் காணேன்,
அக் கைக் கரியின் குரலே
அன்ற ஈது’ என்ன வெருவா,
‘மக்கள் - குரல்ழு என்று அயர்வேன்,
மனம் நொந்து, அவண் வந்தனெனால்.
‘(அது கேட்டு) புக்கு - ஆற்றில் நுழைந்து; பெரு நீர் நுகரும் -
மிகுதியானநீரைக் குடிக்கும்; பொரு போதகம் என்று - போரிடும் யானை
என்று கருதி (அவ்ஓசைவழியே); கைக்கண் கணை சென்றது அலால் -
கையின்கண் இருந்த அம்பு சென்றதேஅல்லாமல்; கண்ணின் தெரியக்
காணேன் - கண்ணால் நன்கு விளங்கப் பார்க்காத நான்; (அலறும் ஒலி
வந்தவுடன்); ‘ஈது அக் கைக்கரியின் குரல் அன்று’ என்ன வெருவா -
இதுநாம் நினைத்த துதிக்கை உடைய யானையின் ஒலி அன்று என்று
கருதிப் பயந்து; ‘மக்கள் குரல்’ என்று அயர்வேன் - மனிதக் குரல்
என்று கருதிச் சோர்ந்து; மனம் நொந்து -மனம் வருந்தி; அவண்
வந்தனென் - நீர் முகக்கும் துறைக்கு வந்தேன்.’
விழுந்து அலறிய போதுதான் மனிதக் குரல் என்று வேறுபாடு
அறிந்தேன். நடுங்கினேன்என்றான். ‘ஆல்ழு அசை. 75