சப்போட்டா
சப்போட்டா உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.
சப்போட்டாவில் அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் நிவாரணியாக செயல்படுகிறது.
சப்போட்டா பழத்தை தினமும் சாப்பிட்டுவர கண்களுக்கு நல்ல பலனைத் தருகிறது.
சப்போட்டா நாள்பட்ட இருமல், எலும்பு பலவீனம், உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி போன்றவற்றிற்கு மிகவும் நல்லது.
சப்போட்டாவில் மெக்னீசியம் உள்ளதால், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டது.
பித்தம் உள்ளவர்களுக்கும், மூல நோய் உள்ளவர்களுக்கும் சப்போட்டா பழம் எளிய இயற்கை மருந்தாக உள்ளது.
இரத்த சோகை, வாய்வழி புற்றுநோய் போன்றவற்றை தடுக்கவும் பயன்படுகிறது.
மேலும் சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
