ஆவிகள் பற்றி நம்பப் படும் சில விஷயங்கள்:-

bookmark

வெள்ளை மாளிகையில் பல பேய்கள் உள்ளது என நம்பப்படுகிறது. குறிப்பாக அபிகைல் ஆடம்ஸ் என்ற இறந்து போன பெண், தன் துணிகளை தொங்கவிட்டிருந்த கிழக்கு அறை நோக்கி அடிக்கடி செல்வதை பலர் பார்த்துள்ளனர். இந்து தவிர லிங்கன் இறந்த பிறகும் கூட பல ஆண்டுகள் அவரது ஆவி வெள்ளை மாளிகையை சுற்றி, சுற்றி வந்ததாக நம்பப்படுகிறது.

பொதுவாக குழந்தைகள் மற்றும் மிருகங்களின் கண்களுக்கு பேய்கள் தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்கின்றனர். அதிலும் சில குழந்தைகள் பேய்களை தங்களின் கற்பனை நண்பர்களாக எடுத்துக் கொள்வார்கள்.

ஆவிகள் பல விதங்களில் வெளிப்படும். அடர்த்தியான வெளிச்சம், இருட்டு நிழல்கள், பனி மூட்டங்கள், விந்தையான தெளிவற்ற உரு போன்றவைகள் இதில் அடக்கம். முழு உடலுடன் அவைகள் வெளிப்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அவை மிகவும் சாத்தியமற்றது.

மெழுகுவர்த்திச் சுடர் திடீரென நீல நிறத்தில் மாறினாலோ அல்லது எந்தவொரு காற்றுமின்றி திடீரென அணைந்தாலோ, கண்டிப்பாக அங்கே பேய்கள் உள்ளது. அதே போல ஒரு அறையானது தீடீரென பருவ நிலை மாற்றங்கள் இல்லாத சமயத்தில் குளிர்ந்து காணப்படுவதும் கூட பேய்கள் இருப்பதற்கான அடையாளம் தான்.