Bilocation எனும் அமானுஷம்

bookmark

அல்ஃபோனா (Alfonso) இத்தாலியில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுரு, தீவிர உண்மையான கிறிஸ்தவர். ஜெபம் செய்வதிலேயே தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்தவர்.

22/9/1774 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த "பலஸ் தெல் கொதி" இல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தனியே ஒர்மையாக தியானித்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் வெளியில் வந்து, அங்கிருந்த மக்களை பார்த்து விட்டு மீண்டும் அறைக்குள் சென்றார். மீண்டும் சற்று நேரத்தில் திரும்பி வந்து "போப்" சற்று முன்னர் இறந்துவிட்டார் என அறிவித்தார்... அனைவருக்கும் ஆச்சரியம், பலர் நம்பவுமில்லை…

போப் இருப்பது ரோம் நகரில், அதாவது அந்த காலப் பகுதியில் இவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு நாள் பயணம்!

மறு நாள்…

ரோமில் இருந்து அதிகார பூர்வமாக போப் இறந்த தகவல் அல்ஃபோனா வசித்து வந்த அந்த நகருக்கு வந்தது. அனைவருக்கும் ஆச்சரியம், எப்படி இங்கிருந்தபடியே அல்ஃபோனால் அந்த தகவலை கூறமுடிந்தது? உள் உணர்வாக இருக்கும் எனக் கூறினார்கள் சிலர். ஆனால் அப்படிப் பட்டவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.

போப் இறந்த போது அங்கிருந்த சூழ் நிலை பற்றிய தகவல்கள் கிடைக்கத் தொடங்கின. அதில், போப் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கு வந்த அல்ஃபோனா அவரின் அருகில் இருந்து ஜெபம் செய்ததாக உறுதியான தகவல்கள் கிடைத்தன!

"இது எப்படி? ஒரே நபர் ஒரே நேரத்தில் பல கிலோமீட்டர் தூர இடைவெளியில் உள்ள இருவேறுபட்ட இடங்களில் இருக்க முடியும்?" என்று அன்றைய கால கட்டத்தில் குழம்பிப் போனார்கள்.

ஆத்திகவாதிகளோ (தெய்வ நம்பிக்கை உடையவர்கள்) இதனை இறை அருளாகப் பார்கின்றனர். ஆனால் அறிவியல் அறிஞர்களோ இதனை "Bilocation" என்கின்றனர். அதவாது மனத்திற்கு வேகம் அதிகம். அதன் படி ஒரே நபர் ஒரே நேரம் ஆனால் வெவ்வேறு இடங்களில் இருக்க இயலும் என்கின்றனர்.