கடல் காண் படலத்தின் பாடல்கள்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
கடல் காண் படலம்
கடவுள் வாழ்த்து
ஒன்றே என்னின், ஒன்றே ஆம்; பல என்று உரைக்கின், பலவே ஆம்;
அன்றே என்னின், அன்றே ஆம்; ஆமே என்று உரைக்கின், ஆமே ஆம்;
இன்றே என்னின், இன்றே ஆம்; உளது என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!
சேனையோடு சென்று, இராமன் கடலைக் காணுதல்
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும்,
வாழி வற்றா மறி கடலும், மண்ணும், வட பால் வான் தோய,
பாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ, பரந்து எழுந்த
ஏழு-பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்.
பொங்கிப் பரந்த பெருஞ் சேனை, புறத்தும் அகத்தும், புடை சுற்ற-
சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு, தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும், துயிலாத கண்ணன் - கடலைக் கண்ணுற்றான்.
திரைப் பரப்பில் குறுந் திவலையும் தென்றலும்
சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால்,
மாயன், வந்தான்; கண்வளர்வான் என்று கருதி, வரும் தென்றல்
தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்தி, புடை சுருட்டிப்
பாயல் உதறிப் படுப்பதே ஒத்த - திரையின் பரப்பு அம்மா.
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க, வந்து அடர்ந்த
பழிக்கும் காமன் பூங் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை,
சுழிக்கும் கொல்லன் ஊது உலையில் துள்ளும் பொறியின் சுடும், அன்னோ-
கொழிக்கும் கடலின் நெடுந் திரைவாய்த் தென்றல் தூற்றும் குறுந் திவலை.
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய், நிலை தளர்வான்-
தன்னைக் கண்டும், இரங்காது தனியே கதறும் தடங் கடல்வாய்,
பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும்
புன்னைக் குறும் பூ நறுஞ் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே.
கடற் கரையில் தோன்றிய பவளமும் முத்தும்
சிலை மேற்கொண்ட திரு நெடுந் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப,
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன், படி ஏழும்
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள, தனித் தோன்றி,
கொலை மேற்கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ-கொடிப் பவளம்?
தூரம் இல்லை, மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல,
வீர வில்லின் நெடு மானம் வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு?-ஏழை
மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?
கடலின் தோற்றம்
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள், நீங்கா இடர்; கொடியேன்
தந்த பாவை, தவப் பாவை, தனிமை தகவோ? எனத் தளர்ந்து,
சிந்துகின்ற நறுந் தரளக் கண்ணீர் ததும்பி, திரைத்து எழுந்து,
வந்து, வள்ளல் மலர்த் தாளின் வீழ்வது ஏய்க்கும் - மறி கடலே.
பள்ளி அரவின் பேர் உலகம் பசுங் கல் ஆக, பனிக் கற்றைத்
துள்ளி நறு மென் புனல் தெளிப்ப, தூ நீர்க் குழவி முறை சுழற்றி,
வெள்ளி வண்ண நுரைக் கலவை, வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு
அள்ளி அப்ப, திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் - அணி ஆழி.
கொங்கைக் குயிலைத் துயர் நீக்க, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,
வெங் கைச் சிலையன், தூணியினன், விடாத முனிவின் மேல் செல்லும்
கங்கைத் திரு நாடு உடையானைக் கண்டு, நெஞ்சம் களி கூர,
அம் கைத் திரள்கள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது - அணி ஆழி.
மேலே செய்வன குறித்து இராமன் சிந்தித்தல்
இன்னது ஆய கருங் கடலை எய்தி, இதனுக்கு எழு மடங்கு
தன்னது ஆய நெடு மானம், துயரம், காதல், இவை தழைப்ப,
என்னது ஆகும், மேல் விளைவு? என்று இருந்தான், இராமன், இகல் இலங்கைப்
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம்:
மூன்றரைக் கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய்த்
தான் திகழ் தசமுகத்து அவுணன், சாலவும்
ஆன்ற தன் கருத்திடை, அயனோடே மயன்
தோன்றுற நினைதலும், அவரும் துன்னினார்.
வந்திடும் அவர் முகம் நோக்கி, மன்னவன்,
செந் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெறத்
தந்திடும், கணத்திடை என்று சாற்றலும்,
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார்.
மயன் எரியுண்ட இலங்கையைப் புதுப்பித்தல்
பூ வரும் அயனொடும் புகுந்து பொன் நகர்,
மூவகை உலகினும் அழகு முற்றுற,
ஏவு என இயற்றினன், கணத்தின் என்பரால்-
தேவரும் மருள்கொள, தெய்வத் தச்சனே.
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை
நல் நகர் நோக்கினன், நாகம் நோக்கினான்,
முன்னையின் அழகு உடைத்து! என்று, மொய் கழல்
மன்னனும், உவந்த, தன் முனிவு மாறினான்.
முழுப் பெருந் தனி முதல் உலகின் முந்தையோன்
எழில் குறி காட்டி நின்று, இயற்றி ஈந்தனன்;-
பழிப்ப அரும் உலகங்கள் எவையும் பல் முறை
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ?
திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய,
பொரு கழல், இராவணன் அயற்குப் பூசனை
வரன்முறை இயற்றி, நீ வழிக் கொள்வாய் என்றான் -
அரியன தச்சற்கும் உதவி, ஆணையால்.
சுற்றத்தார் சூழ, இராவணன் ஆலோசனை மண்டபத்து வீற்றிருத்தல்
அவ் வழி, ஆயிரம் ஆயிரம் நிரைச்
செவ் வழிச் செம் மணித் தூணம் சேர்த்திய
அவ் எழில் மண்டபத்து, அரிகள் ஏந்திய
வெவ் வழி ஆசனத்து, இனிது மேவினான்.
வரம்பு அறு சுற்றமும், மந்திரத் தொழில்
நிரம்பிய முதியரும், சேனை நீள் கடல்
தரம் பெறு தலைவரும், தழுவத் தோன்றினான் -
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான்.
முனிவர் முதலானோரை அகற்றி, மந்திரிமாரையும், உறவினரையும், உடன் இருக்கச் செய்தல்
முனைவரும், தேவரும், மற்றும் உற்றுளோர்
எனைவரும், தவிர்க! என ஏய ஆணையான்,
புனை குழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான் -
நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்.
பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர்,
தண்டல் இல் மந்திரத் தலைவர், சார்க! எனக்
கொண்டு உடன் இருந்தனன் - கொற்ற ஆணையால்
வண்டொடு காலையும் வரவு மாற்றினான்.
ஆன்று அமை கேள்வியர் எனினும், ஆண்தொழிற்கு
ஏன்றவர் அன்பினர் எனினும், யாரையும்,
வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்
போன்றவர் அல்லரை, புறத்துப் போக்கினான்.
திசைகளில் வீரரை நிறுவுதல்
திசைதொறும் நிறுவினன், உலகு சேரினும்
பிசை தொழில் மறவரை; பிறிது என் பேசுவ-
விசையுறு பறவையும், விலங்கும், வேற்றவும்,
அசைதொழில் அஞ்சின, சித்திரத்தினே?
இராவணன் தன் மாட்சி அழிந்தமை குறித்து பேசுதல்
தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என், இனி?
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர்;
ஆட்சியும், அமைவும், என் அரசும் நன்று! எனா,
சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்:
சுட்டது குரங்கு; எரி சூறையாடிடக்
கெட்டது, கொடி நகர்; கிளையும் நண்பரும்
பட்டனர்; பரிபவம் பரந்தது, எங்கணும்;
இட்ட இவ் அரியணை இருந்தது, என் உடல்.
ஊறுகின்றன கிணறு உதிரம்; ஒண் நகர்
ஆறுகின்றில தழல்; அகிலும் நாவியும்,
கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு
நாறுகின்றது நுகர்ந்திருந்தம், நாம் எலாம்,
மற்று இலது ஆயினும், "மலைந்த வானரம்
இற்று, இலதாகியது" என்னும் வார்த்தையும்
பெற்றிலம்; பிறந்திலம் என்னும் பேர் அலால்,
முற்றுவது என்? இனி, பழியின் மூழ்கினாம்!
சேனை காவலன் பிரகத்தன் பேசுதல்
என்று அவன் இயம்பலும், எழுந்து இறைஞ்சினான்,
கன்றிய, கருங் கழல், சேனை காவலன்;
ஒன்று உளது உணர்த்துவது; ஒருங்கு கேள்! எனா,
நின்றனன், நிகழ்த்தினன், புணர்ப்பின் நெஞ்சினான்:
"வஞ்சனை மனிதரை இயற்றி, வாள் நுதல்,
பஞ்சு அன மெல் அடி, மயிலைப் பற்றுதல்
அஞ்சினர் தொழில்" என அறிவித்தேன்; அது
தஞ்சு என உணர்ந்திலை - உணரும் தன்மையோய்!
கரன் முதல் வீரரைக் கொன்ற கள்வரை,
விரி குழல் உங்கை மூக்கு அரிந்த வீரரை,
பரிபவம் செய்ஞ்ஞரை, படுக்கலாத நீ,
"அரசியல் அழிந்தது" என்று அயர்தி போலுமால்.
தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரைக்
கண்டவர், பொறுப்பரோ, உலகம் காவலர்?
வண்டு உறை அலங்கலாய்! வணங்கி வாழ்வதோ,
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான்?
செற்றவர், எதிர் எழும் தேவர், தானவர்,
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற,
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது,
வெற்றியோ? பொறைகொலோ? விளம்ப வேண்டுமால்.
விலங்கினர் உயிர் கெட விலக்கி, மீள்கலாது,
இலங்கையின் இனிது இருந்து, இன்பம் துய்த்துமேல், -
குலம் கெழு காவல! - குரங்கின் தங்குமோ?
உலங்கும் நம் மேல் வரின், ஒழிக்கற்பாலதோ?
போயின குரங்கினைத் தொடர்ந்து போய், இவண்
ஏயினர் உயிர் குடித்து, எவ்வம் தீர்கிலம்;
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்,
ஓயும், நம் வலி என, உணரக் கூறுனான்.
மகோதரன் பேச்சு
மற்று அவன் பின்னுற, மகோதரப் பெயர்க்
கல் தடந் தோளினான், எரியும் கண்ணினால்
முற்றுற நோக்கினான், முடிவும் அன்னதால்;
கொற்றவ! கேள் என, இனைய கூறினான்:
தேவரும் அடங்கினர்; இயக்கர் சிந்தினர்;
தா வரும் தானவர் தருக்குத் தாழ்ந்தனர்;
யாவரும், "இறைவர்" என்று இறைஞ்சும் மேன்மையர்
மூவரும் ஒதுங்கினர் - உனக்கு, மொய்ம்பினோய்!
ஏற்றம் என் பிறிது, இனி-எவர்க்கும் இன் உயிர்
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை
கூற்றும், "நீ தன் உயிர் கொள்ளும் கூற்று" எனத்
தோற்று, நின் ஏவல் தன் தலையில் சூடுமால்?
வெள்ளிஅம் கிரியினை விடையின் பாகனோடு
அள்ளி, விண் தொட எடுத்து, ஆர்த்த ஆற்றலாய்!
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு
எள்ளுதி போலும், நின் புயத்தை, எம்மொடும்?
மண்ணினும், வானினும், மற்றும் முற்றும் நின்,
கண்ணினும் நீங்கினர் யாவர், கண்டவர்?
நண்ண அரும் வலத்தினர் யாவர், நாயக!
எண்ணிலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ?
இடுக்கு இவண் இயம்புவது என்னை? ஈண்டு எனை
விடுக்குவையாம் எனின், குரங்கை வேர் அறுத்து,
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு, உன் பகை
முடிக்குவென் யான் என முடியக் கூறினான்.
வச்சிரதந்தனின் கூற்று
இச் சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின்,
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான்,
அச் சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன் -
பச்சிரத்தம் பொழி பருதிக் கண்ணினான்.
"போய் இனி, மனிதரைக் குரங்கைப் பூமியில்
தேயுமின், கைகளால்; தின்மின்" என்று எமை
ஏயினை இருக்குவது அன்றி, என், இனி
ஆயும் இது? எம்வயின் அயிர்ப்பு உண்டாம்கொலோ?
எவ் உலகத்தும் நின் ஏவல் கேட்கிலாத்
தெவ்வினை அறுத்து, உனக்கு அடிமை செய்த யான்
தவ்வின பணி உளது ஆகத்தான் கொலோ,
இவ் வினை என்வயின் ஈகலாது? என்றான்.
வச்சிரதந்தன் பேச்சைத் மறுத்து துன்முகன் சொல்லியவை
நில், நில் என்று, அவன் தனை விலக்கி, நீ இவை
என் முனும் எளியர்போல் இருத்தியோ? எனா,
மன் முகம் நோக்கினன், வணங்கி, வன்மையால்,
துன்முகன் என்பவன், இனைய சொல்லுவான்:
திக்கயம் வலி இல; தேவர் மெல்லியர்;
முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது;
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின்,
அக்கட, இராவணற்கு அமைந்த ஆற்றலே!
பொலிவது, பொதுவுற எண்ணும் புன் தொழில்
மெலியவர் கடன்; நமக்கு இறுதி வேண்டுவோர்
வலியினர்எனில், அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ -
ஒலி கழல் ஒருவ! - நம் உயிருக்கு அன்பினால்?
கண்ணிய மந்திரம் கருமம் காவல! -
மண் இயல் மனிதரும், குரங்கும், மற்றவும்,
உண்ணிய அமைந்தன; உணவுக்கு உட்குமேல்,
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே?
எரி உற மடுப்பதும், எதிர்ந்துளோர் படப்
பொரு தொழில் யாவையும் புரிந்து, போவதும்
வருவதும், குரங்கு; நம் வாழ்க்கை ஊர் கடந்து,
அரிதுகொல், இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்?
வந்து, நம் இருக்கையும், அரணும், வன்மையும்,
வெந் தொழில் தானையின் விரிவும், வீரமும்,
சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர்,
உய்ந்து தம் உயிர்கொடு இவ் உலகத்துள் உளார்?
ஒல்வது நினையினும், உறுதி ஓரினும்,
வெல்வது விரும்பினும், வினையம் வேண்டினும்,
செல்வது ஆங்கு; அவருழைச் சென்று, தீர்ந்து அறக்
கொல்வது கருமம் என்று உணரக் கூறினான்.
துன்முகனை அடக்கி, மாபெரும்பக்கன் பேசுதல்
காவலன் கண் எதிர், அவனைக் கை கவித்து,
யாவது உண்டு, இனி நமக்கு? என்னச் சொல்லினான்;
கோவமும் வன்மையும் குரங்குக்கே எனா, -
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான்.
முந்தினர், முரண் இலர் சிலவர், மொய் அமர்
நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ?
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால்,
வெந்ததோ, இலங்கையோடு அரக்கர் வெம்மையும்?
மானுடர் ஏவுவார்; குரங்கு வந்து, இவ் ஊர் -
தான் எரி மடுப்பது; நிருதர், தானையே,
ஆனவர் அது குறித்து அழுங்குவார் எனின்,
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ?
நின்று நின்று, இவை சில விளம்ப நேர்கிலென்;
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அறக்
கொன்று தின்றல்லது, ஓர் எண்ணம் கூடுமோ?
என்றனன் - இகல் குறித்து எரியும் கண்ணினான்.
பிசாசன் முதலியோர் பேச்சு
திசாதிசை போதும் நாம், அரசன் செய் வினை
உசாவினன், உட்கினன்; ஒழிதும் வாழ்வு என்றான் -
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல்
நிசாசரன், உருப் புணர் நெருப்பின் நீர்மையான்.
ஆரியன் தன்மை ஈது ஆயின், ஆய்வுறு
காரியம் ஈதுஎனின், கண்ட ஆற்றினால்,
சீரியர் மனிதரே; சிறியம் யாம் எனா,
சூரியன்பகைஞன் என்று ஒருவன், சொல்லினான்.
ஆள்வினை நிலைமையும், அரக்கர் ஆற்றலும்,
தாழ் வினை இதனின்மேல் பகரத் தக்கதோ?
சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம்! எனா,
வேள்வியின் பகைஞனும் உரைத்து, வெள்கினான்.
தொகை நிலைக் குரங்குடை மனிதர்ச் சொல்லி என்?
சிகை நிறச் சூலிதன் திறத்தின் செல்லினும்,
நகை உடைத்தாம்; அமர் செய்தல் நன்று எனா,
புகை நிறக் கண்ணனும் புகன்று, பொங்கினான்.
மற்று அவன் பின்னுற, மற்றையோர்களும், -
இற்றிதுவே நலம்; எண்ணம் மற்று இல் என்று,
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் -
புற்று உறை அரவு எனப் புழுங்கு நெஞ்சினார்.
கும்பகருணன் பேச்சு
வெம்பு இகல் அரக்கரை விலக்கி, வினை தேரா
நம்பியர் இருக்க! என, நாயகனை முன்னா,
எம்பி எனகிற்கில், உரைசெய்வல் இதம் என்னா,
கும்பகருணப் பெயரினான் இவை குறித்தான்:
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்;
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து, அறிவு அமைந்தாய்;
தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்;
ஏயின உறத் தகைய இத்துணையவேயோ?
ஓவியம் அமைந்த நகர் தீ உண, உளைந்தாய்,
"கோ-இயல் அழிந்தது" என; வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து, சிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ ?
"நல் நகர் அழிந்தது" என நாணினை; நயத்தால்
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல்
மன் நகை தரத் தர, ஒருத்தன் மனை உற்றாள்,
பொன் அடி தொழத் தொழ, மறுத்தல் புகழ் போலாம்?
என்று ஒருவன் இல் உறை தவத்தியை, இரங்காய்,
வன் தொழிலினாய், மறை துறந்து, சிறை வைத்தாய்,
அன்று ஒழிவதாயின, அரக்கர் புகழ்; ஐயா!
புன் தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ?
ஆசு இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்!
சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்;
மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி, மன்னா!
விட்டிடுதுமேல், எளியம் ஆதும்; அவர் வெல்ல,
பட்டிடுதுமேல், அதுவும் நன்று; பழி அன்றால்.
மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால்,
கரன் படை படுத்து, அவனை வென்று, களை கட்டான்;
நிரம்பிடுவது அன்று, அதுவும்; நின்றது, இனி நம்பால்
உரம் படுவதே; இதனின் மேல் உறுதி உண்டோ ?
வென்றிடுவர் மானுடவரேனும், அவர்தம்மேல்
நின்று, இடைவிடாது நெறி சென்று, உற நெருக்கித்
தின்றிடுதல் செய்கிலம் எனின், செறுநரோடும்
ஒன்றிடுவர் தேவர்; உலகு ஏழும் உடன் ஒன்று ஆம்.
ஊறு படை ஊறுவதன் முன்னம், ஒரு நாளே,
ஏறு கடல் ஏறி, நரர் வானரரை எல்லாம்
வேறு பெயராதவகை, வேரொடும் அடங்க
நூறுவதுவே கருமம் என்பது நுவன்றான்.
கும்பகருணன் கூற்றிற்கு இசைந்த இராவணன் போருக்கு எழுக! எனல்
நன்று உரைசெய்தாய் - குமர! - நான் இது நினைந்தேன்;
ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம்; நமர் கொடிப் படையை எல்லாம்,
"இன்று எழுக" என்க! என இராவணன் இசைத்தான்.
இந்திரசித்து தன் தந்தையின் செயலைத் தடுத்து, வென்று வருவேன் என்று கூறுதல்
என்று அவன் இயம்பிடும் எல்லையினில், வல்லே
சென்று படையோடு, சிறு மானுடர் சினப் போர்
வென்று பெயர்வாய், அரச! நீ கொல்? என வீரம்
நன்று பெரிது! என்று மகன் நக்கு, இவை நவின்றான்:
ஈசன் அருள் செய்தனவும், ஏடு அவிழ் மலர்ப் பேர்
ஆசனம் உவந்தவன் அளித்தனவும், ஆய
பாசம் முதல் வெம் படை சுமந்து, பலர் நின்றார்;
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ?
முற்றும் முதலாய் உலகம் மூன்றும், எதிர் தோன்றிச்
செற்ற முதலோரொடு செறுத்தது ஒர் திறத்தும்,
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின், என்னைப்
பெற்றும் இலை; யான் நெறி பிறந்தும் இலென் என்றான்.
குரங்கு பட, மேதினி குறைந்தலை நடப் போர்
அரங்கு பட, மானுடர் அலந்தலை பட, பார்
இரங்கு படர் சீதை பட, இன்று இருவர் நின்றார்
சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி - சினத்தோய்!
சொல்லிடை கிழிக்கிலை, சுருங்கிய குரங்கு என்
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும்
வில்லிடை கிழித்த மிடல் வாளி வெருவி, தம்
பல்லிடை, கிழித்து இரிவ கண்டு, பயன் உய்ப்பாய்.
இன்னம் ஒன்று உரை செய்கேன்; இனிது கேள், எம்பிரான்! இருவர் ஆய
அன்னவர் தம்மொடும் வானரத் தலைவராய் அணுகி நின்றார்,
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர்; அவரொடும் மாறுகோடல்
கன்மம் அன்று; இது நமக்கு உறுதி என்று உணர்தலும், கருமம் அன்றால்.
இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச,
வசையும் கீழ்மையும் மீக்கொள, கிளையொடும் மடியாது,
அசைவு இல் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி; அதன் மேல்
விசையம் இல் எனச் சொல்லினன் - அறிஞரின் மிக்கான்.
இராவணன் சினந்து வீடணனைக் கடிந்து பேசுதல்
கேட்ட ஆண்தகை கரத்தொடு கரதலம் கிடைப்பப்
பூட்டி, வாய்தொறும் பிறைக் குலம் வெண் நிலாப் பொழிய,
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும்
தோள் தடங்களும் குலுங்க, நக்கு, இவை இவை சொன்னான்:
போருக்குப் புறப்படுவோம் என்ற இராவணனை நெருங்கி, வீடணன் உறுதிமொழி உரைத்தல்
என்று தன் உரை இழித்து, நீ உணர்விலி என்னா,
நன்று போதி; நாம் எழுக! எனும் அரக்கனை நணுகி,
ஒன்று கேள், இனம் உறுதி என்று, அன்பினன், ஒழியான்,
துன்று தாரவன், பின்னரும், இனையன சொன்னான்:
அன்ன மானுடன் ஆகி வந்து, அவதரித்து அமைந்தான்,
சொன்ன நம்பொருட்டு, உம்பர்தம் சூழ்ச்சியின் துணிவால்;
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான்.
கொச்சைத் துன்மதி எத்தனை போரிடைக் குறைந்தான்?
இச்சைக்கு ஏற்றன, யான் செய்த இத்தனை காலம்,
முச்சு அற்றான்கொல், அம் முழுமுதலோன்? என முனிந்தான்.
தந்தி கோடு இறத் தகர்த்த நாள், தன்னை யான் முன்னம்
வந்த போர்தொறும் துரந்த நாள், வானவர் உலகைச்
சிந்த வென்ற நாள், சிறியன்கொல், நீ சொன்ன தேவன்?
அவனும், மற்று உள அமரரும், உடன் உறைந்து அடங்க,
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது, ஆண்ட அப் பொரு இல்
உவன் இலாமையினோ? வலி ஒதுங்கியோ? உரையாய்!
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்,
தீய, "சாலவும் சிறிது" என நினைந்து, நாம் தின்னும்
ஓயும் மானுட உருவு கொண்டனன்கொலாம் - உரவோன்?
எய்த்த சிந்தையர், ஏகுழி ஏகுழி எல்லாம்,
கைந்த ஏற்றினும் கடலிய புள்ளினும், முதுகில்
தைத்த வாளிகள் இன்று உள, குன்றின் வீழ் தடித்தின்.
இஞ்சி மா நகர் இடம் உடைத்து; ஈண்டு இனிது இருத்தி;
அஞ்சல், அஞ்சல்! என்று, அருகு இருந்தவர் முகம் நோக்கி,
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து, உரும் என நக்கான்.
முன்னை நாள், இவன் முனிந்திடக் கிளையொடும் முடிந்தார்;
இன்னம் உண்டு, யான் இயம்புவது; இரணியன் என்பான் -
தன்னை உள்ளவா கேட்டி என்று உரைசெயச் சமைந்தான்:
சென்னியின் மணி முடி இருளைச் சீறிட,
அன்னபேர் அவையின் ஆண்டு இருந்த ஆண்டகை
முன்னியது உணர்த்துவான், முறையின் நோக்கினான்.
ஓதும் நூறாயிர கோடியோரொடும்,
காது வெஞ் சேனையின் காவலோர் கணக்கு
ஓதிய வெள்ள நூறவர்கள் தம்மொடும்.
தம்பியர்தம்மொடும், தருக்கும் வாசவன்
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம்,
உம்பரும் போற்றுதற்கு உரிய, மைந்தரும்,
மேலவர் தம்மொடும், விளங்கு சுற்றமாம்
சால்வுறு கிளையொடும், தழுவி, மந்திரத்து
ஏலுறும் இராவணன் இசைத்தல் மேயினான்:
அன்னவர் அல்லர்; மற்று அரக்கர் என்பதற்கு
இந்நிலை பிடித்தனை; இறைவ! நீ எனா,
முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான்.
அருமை கண்டு, அளித்தனன் அழிவு இலாதது ஓர்
பெரு வரம் என்றிடின், பேதை மானிடர்
இருவரும் குரங்கும் என் செயல் ஆவதே?
நிறை கடல் துயில் பரன் அன்று; நின்று வாழ்
சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர்
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ?
கோதுறு குலச் சிறுமை கொண்டுடையதேனும்,
வாதுறு பகைத் திறம் மலிந்துடையதேனும்,
நீதியதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ ?
நந்துதல் இலாது இறைவன் ஆயிட நயந்தோ,
சிந்தையில் விரும்புதல் செய் மங்கையர் திறத்தோ,
புந்திகொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள்?
காசு இல் ஒரு மங்கையவளைத் தனி கவர்ந்தும்,
கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய்,
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ?
விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை;
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன், ஐயா!
ஈசன் முன் அளித்தது, உன் இருந் தவ வியப்பால்;
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ? -
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா!
வாலியை வதைத்து, எழு மராமரமும் உட்க,
கோல வரி வில் பகழி கொண்டுடையன்" என்றார்;
சீலம் உறு மானிடன் எனத் தெளியலாமோ?
சீதையை விடுத்து, "எளியர் செய் பிழை பொறுக்க" என்று
ஓதல் கடனாம் என ஒருப்பட உரைத்தான்;
மூதுரை கொள்வோனும், அதுவே முறைமை என்றான்.
கன்றி, நயனத்திடை பிறந்தன கடைத் தீ;
இன்று முடிவுற்றது உலகு என்று எவரும் அஞ்ச,
குன்று உறழ் புயக் குவை குலுங்கிட நகைத்தான்.
பகைத்துடைய மானுடர் வலிச் செயல் பகர்ந்தாய்;
திகைத்தனைகொலாம்; எனது சேவகம் அறிந்தும்,
வகைத்திறம் உரைத்திலை; மதித்திலை; என்? - எம்பி!
வரங்களும் அழிந்திடுவதோ? மதியிலாதாய்!
தரம்கொடு இமையோர் எனது தாள் பரவ, யான் என்
சிரம்கொடு வணங்குவதும், மானுடன் திறத்தோ?
மிகுத்த திறல் வானவரும், வேத முதல் யாவும்,
வகுத்து, அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே
உகுத்த பொழுதத்தினும், எனக்கு அழிவும் உண்டோ ?
துறந்தனை, அருஞ் சமரம்; ஆதல், இவை சொன்னாய்;
இறந்துபட வந்திடினும், இப் பிறவிதன்னில்
மறந்தும் உளதோ, சனகன் மங்கையை விடுத்தல்?
நினைத்தனன், மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல;
சினத்தொடும் மறுத்து இகழ்வு செய்தனன்; இது ஊழின்
வினைத் திறம்; எவர்க்கும் அது வெல்வது அரிது அன்றே!
பொறுத்தருள் புகன்ற பிழை என்று அடி வணங்கி,
உறுத்துதல் செய் கும்பகருணத் திறலினோனும்,
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான்;
தீதொடு துணிந்து, பினும் எண்ணுதல் சிறப்போ?
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன்? ஐயா!
போதியது நம் அரசு, பொன்ற வரு காலம்,
இனிய சித்திரம் என ஏங்கி நின்று, தான்
நனை மலர்க் கண்கள் நீர் சொரிய, நல் நெறி
வினை பயில் வீடணன் விளம்பல் மேயினான்;
ஆனவள், கற்பினால் எரிந்தது அல்லது,
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும்,
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற எடுத்தேன்;
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்றக்
கூசி, என் வலி குறைந்திலென், பாதலத்து அமர்ந்தேன்;
சுமந்து, நீ தவம் புரிக!" எனச் சுக்கிரன் உரைப்ப,
தமம் திரண்டு உறும் புலப் பகை சிமிழ்த்திடத் தருக்கி
நிமிர்ந்து நின்றனென், நெடும் பகல் அருந் தவ நிலையின்.
"நன்று, நன்று!" என நயந்து, எனை வரும்படி அழைத்து,
"ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழியச்
சென்று வாழுதி" எனத் தந்த வரம் சிதைந்திடுமோ?
மூர்த்தம் என்னிடத்து இல் எனக் கோடலை; முதல் நாள்
சீர்த்த நண்பினர் ஆயபின், சிவன் படை உவர்மேல்
கோத்து, வெஞ் சமம் புரிந்திலென், எனது உளம் கூசி.
தந்த தேவனுக்கு ஆயினும் என் வலி தவிர்த்துச்
சிந்த ஒண்ணுமோ? மானிடர்திறத்து எனக்கு அழிவு
வந்தது என்று உரைத்தாய்; இது வாய்மையோ? - மறவோய்!
தீய வான் குரங்கு அனைத்தையுஞ் செறுத்து, அற நூறி,
தூய வானவர் யாரையும் சிறையிடைத் தொடுத்துக்
காய்வென் என்று தன் கண் சிவந்து இனையன கழறும்.